|
அடியாக
வெள்ளியாலான உருளைகளைப் பொன்னாலான அச்சில்
இணைத்து இட்டு, அதன் மேல், ஒளி வீசி உயர்ந்து நின்ற மரகதத் தாலான
மலை மீது படர்ந்த கொடிகள் போல் வெண் முத்தாலாகிய மாலைகளைத்
தவழ விட்டு, அவ்விடத்து அமர்ந்த குடிகள் போல மணிகளாலான பாவை
உருவங்கள் கிளம்பித் தோன்ற அமைத்து, அதன் மேல், பூங்கா போலப்
பசும் பொன்னால் அமைத்த பரந்த இடத்தில் மணமுள்ள மலர் போல் கதிர்
வீசும் மணிகளைப் பூத்தது போல் பரப்பி, யாவற்றிற்கும் மேலாக ஒளி
பொருந்திய உச்சி வானம் போன்ற சிகரத்தை வயிரத் தூண்கள் தாங்கி
நின்ற தன்மையாய், முனிவர் தலைவனாகிய சூசைக்கு ஒரு தேர்
அமைக்கப்பட்டது.
'அமைத்தது'
என்ற செய்வினை, 'அமைக்கப்பட்டது' எனச்
செயப்பாட்டு வினைப் பொருளில் வந்தது.
| 110 |
ஒற்றையா மாழித் தேர்நல நாண
வொற்றைநன்
மாமையில் வனைந்த
கற்றையா ரிரதத் துயிரெனப் பகல்செய்
கதிரெனக்
கடியொளி வடிவ
முற்றையார் மணிபொன் முத்தலர் வழங்க
முரசின
முகிலினு முழங்க
மற்றையா வருஞ்சூழ் மன்னனோ டிறைஞ்ச
மறையவ
ரேற்றினர் தொழுதே. |
| |
ஒற்றை ஆம் ஆழித்
தேர் நலம் நாண, ஒற்றை நல் மாமையில்
வனைந்த
கற்றை ஆர் இரதத்து உயிர் என, பகல் செய் கதிர் என, கடி
ஒளி
வடிவம்
முற்றை ஆர் மணி பொன் முத்து அலர் வழங்க, முரசு இனம்
முகிலினும்
முழங்க,
மற்றை யாவரும் சூழ் மன்னனோடு இறைஞ்ச, மறையவர்
ஏற்றினர்
தொழுதே. |
கதிரவனின் ஒற்றைச் சக்கரத் தேரின் நலமும் ஒப்பாகாது
நாணும்படி, ஒற்றையாய்த் தனக்கு நிகரற்ற நல்ல அழகோடு செய்தமைத்த
கதிர்க்கற்றை நிறைந்த அந்தத் தேருக்கு உயிர் போலவும், பகலைச் செய்யும்
பகலவனுக்கு நிகராகவும், சூசையின் விளக்கமான ஒளி கொண்ட திருவுருவம்
முழுவதும் நிறைந்த மணிகளாலும் பொன்னாலும் முத்தாலும் மலர்களாலும்
அமைந்த
|