பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 848

மாலைகளை அணிவித்து, முரசு வகை மேகத்து இடியினும் பெரிதாய்
முழங்க, சூழ நின்ற மற்ற யாவரும் மன்னனோடு சேர்ந்து வணங்க,
வேதியர் தாமும் தொழுது அவ்வுருவத்தை அதன் மீது ஏற்றி வைத்தனர்.

 
                 111
கள்ளுற மலர்ந்த கடிமுகை பரப்பிக்
     கதிருற விளக்கிய தெருவிற்
றெள்ளுற விளங்கி வான்றெரு விரவி
     திரிவதே போன்றுபே ருவகை
யுள்ளுறத் தொழுவார் நசையள வொடுமெல்
     லுருண்டுகண் கூசுவ பேணி
யள்ளுற மணிப்பூம் புகைமுகில் சூழ
     வருளுற நடந்ததே யிரதம்.
 
கள் உற மலர்ந்த கடி முகை பரப்பி கதிர் உற விளக்கிய தெருவில்
தெள் உற விளக்கி, வான் தெரு இரவி திரிவதே போன்று, பேர் உவகை
உள் உறத் தொழுவார் நசை அளவொடு மெல் உருண்டு, கண் கூசுவ
                                             பேணி
அள் உற மணிப் பூம் புகை முகில் சூழ, அருள் உற் நடந்ததே இரதம்.

     தேனோடு மலர்ந்த மணமுள்ள மலர்களைப் பரப்பிக் கதிரொளியால்
நன்கு விளங்கித் தோன்றிய தெருவில் தெளிந்த தோற்றத்தோடு விளங்கி,
வானமாகிய தெருவில் ஞாயிறு உலாவுதல் போன்று, பெரு மகிழ்ச்சி தம்
உள்ளத்தில் அமையக்கொண்டு தொழுவோர் ஆசைக்கு அளவாக மெதுவாக
உருண்டு, காண்பவர் கண் கூசாது பேணிய தன்மையாய்ச் செறிவோடு
அழகிய மெல்லிய நறுமணப் புகை மேகம் போல் சூழ்ந்து பரவ, அத்தேர்
யாவர்க்கும் அருளைப் பொழிந்த விதமாய் நடந்தது.

 
                   112
புற்பதிக் குழாத்தி னிரைத்தன பிச்சம்
     புயற்குழாத் தெழுந்தன புகைக
ளற்பதி திங்கள் பொழிகதிர்க் குப்பை
     யணிக்குழாத் திரட்டின கவரி