தற்பதி பெயர்ந்து
வீழுமீன் குழாத்திற்
றனத்துகள் மணித்துகள் சிந்தப்
பொற்பதிச் சுடர்கட் குழாத்தெரி மணிவாய்
பூப்பநண் பகல்விளக் களவோ. |
| |
புல் பதிக் குழாத்தின்
நிரைத்தன பிச்சம்; புயல் குழாத்து எழுந்தன
புகைகள்;
அல் பதி திங்கள் பொழி கதிர்க் குப்பை அணிக் குழாத்து
இரட்டின
கவரி;
தன் பதி பெயர்ந்து வீழும் மீன் குழாத்தின் தனத் துகள் மணித் துகள்
சிந்த,
பொன் பதிச் சுடர்கள் குழாத்து எரி மணி வாய் பூப்ப நண்பகல் விளக்கு
அளவோ? |
புல்லினத்துத்
தலைமை கொண்ட பனைக் கூட்டம் போல் குடைகள்
வரிசையாய்ச் செறிந்தன. மணப் புகைகள் மேகக் கூட்டம் போல் எழுந்தன;
இரவுக்குத் தலைவனாகிய மதி பொழியும் கதிர்க் கூட்டம் போல்
வெண்சாமரைகள்
அழகிய வரிசைகளாக வீசிச் சென்றன; தன்
இருப்பிடமாகிய வானத்தினின்று பெயர்ந்து விழும் விண்மீன் கூட்டம் போல்
பொன்னின் தூளும் மணிகளின் தூளும் சொரியப்பட்டன. பொன்னுலகமாகிய
வானுலகிலுள்ள சுடர்களின் கூட்டம் போல், ஒளி வீசும் மணிகள் பதித்த
தம் வாய் மலர, நண்பகல் போல் விளங்கச் செய்யும் விளக்குகளுக்கு
அளவும் உண்டோ?
'புறக்கா
ழனவே புல்லென மொழிப' என்ற விதிப்படி (தொல்.
மர, 63). புறத்தே வைரம் கொண்ட பனை 'புல்' எனவும், அப்புல்
லினத்துக்குத் தலைமை பூண்டு நிற்றலின், 'புற்பதி' எனவும் பெயர் பெற்றது.
| 113 |
பண்கவர்
குரலாற் பண்ணிசைக் கிசைப்பாப்
பாடலு மாடலு மொளிமீன்
மண்கவர் சுடர்வாய் மணித்தெருத் தொறுமெல்
வாய்த்தலு மற்றழ கனைத்துங்
கண்கவர் வனப்பிற் கண்டனர் கணியாக்
களிப்பொடு வியந்துகை விதிர்ப்ப
வெண்கவர் தயையிற் பார்த்தெனச் சூசை
விழித்தகண் வினையரு ளளவோ. |
|