பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 850

பண் கவர் குரலால், பண் இசைக்கு, இசைப் பாப் பாடலும்,
                         ஆடலும், ஒளி மீன்
மண் கவர் சுடர் வாய் மணித் தெருத் தொறும் எல் வாய்த
                         தலும், மற்று அழகு அனைத்தும்
கண் கவர் வனப்பின் கண்டனர் கணியாக் களிப்பொடு                          
வியந்து கை விதிர்ப்ப,
எண் கவர் தயையின் பார்த்து எனச் சூசை விழித்த கண்
                         வினை அருள் அளவோ?


     வீணையின் பாடலுக்கு ஏற்ப, அவ்வீணையையும் கவரக் கூடிய
குரலால் இசைப் பாடல்களைப் பாடுதலும், பாடலுக்கு ஏற்ப ஆடுதலும், ஒளி
பொருந்திய விண்மீனையும் ஒப்பனையால் கவரும் ஒளி வாய்ந்த அழகிய
தெருத் தோறும் ஒளி விளக்குகள் அமைந்திருந்தலும், மற்றுமுள்ள அழகுகள்
அனைத்தையும் கண்ணைப் பறிக்கும் அழகோடு கண்டவரெல்லாம்
கணக்கிட இயலாத களிப்போடு கண்டு வியந்து கைகளை வீசவும்,
எண்ணங்களையெல்லாம் கவர்ந்த தயவோடு தான் பார்த்தாற் போல, சூசை
விழித்துப் பார்த்த கண்களால் காட்டிய அருட் செயலுக்கு அளவும்
உண்டோ?

 
                114
பணிநிலா வீசு மணித்திரள் பூத்துப்
     பகல்செயுங் கைக்கொடி நோக்கீ
ரணிநிலாப் பிறையை மிதித்தெழுந் தொளிசெய்
     யடிநலாம் கன்றியே யன்னாள் மணிநிலாப்
பிறைபோ லீன்றதன் றேவ
     மகற்குமன் பருணிழல் செய்த
துணிநிலாக் கொடியே யிந்நிழல் கொண்டார்
     சுடுந்துயர்க் கஞ்சவோ வென்பார்.
 
"பணி நிலா வீசும் மணித்திரள் பூத்துப் பகல் செயும் கைக் கொடி
                              நோக்கீர்!
அணி நிலாப் பிறையை மிதித்து எழுந்து ஒளி செய் அடி நலாட்கு
                              அன்றியே, அன்னாள்
மணி நிலாப் பிறை போல் ஈன்ற தன் தேவ மகற்கும் அன்பு அருள்
                              நிழல் சய்த
துணி நிலாக் கொடியே; இந் நிழல் கொண்டார் சுடுந் துயர்க்கு
                              அஞ்சவோ?" என்பார்.