பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 851

     "அணிகலன் போல் ஒளி வீசும் மணித்திரள்களையே மலர்களாகப்
பூத்து ஒளி தரும் சூசையின் கைக் கொடியைப் பாருங்கள்! அழகிய பிறை
மதியை மிதித்து அதன்மேல் எழுந்து நின்று ஒளி தரும் அடி கொண்ட
நல்லவளாகிய மரியாளுக்கு மட்டுமல்லாமல், அவள் மணிகளாலான
பிறைமதிபோற் பெற்ற தன் தெய்வமைந்தனுக்கும் அன்பும் அருளும் காட்டி
நிழல் செய்த பிறைத் துண்டம் போன்ற கொடி இதுவே; இந்நிழலைத்
துணையாகக் கொண்டவர் தம்மைச் சுடும் துயருக்கு அஞ்சவும்
வேண்டுமோ?" என்பார் அங்கு நின்ற சிலர்

 
              115
மறையணி தவத்தோ னரசுறீஇத் தானே
     மறைக்கணி யாயினா னென்பார்
பிறையணி பதத்தைத் தானணிந் தன்ன
     பிறைக்கணி யாயினா னென்பார்
பொறையணி குறைக டீர்ப்பவின் றரசாய்ப்
     பொறைக்கணி யாயினா னென்பா
ரிறையணி முடிகொண் டானினி நாமிவ்
     விறைக்கணி யாகுது மென்பார்.
 
"மறை அணி தவத்தோன் அரசு உறீஇ, தானே மறைக்கு அணி
                           ஆயினான்!" என்பார்.
"பிறை அணி பதத்தைத் தான் அணிந்து, அன்ன பிறைக்கு
                              அணி ஆயினான்!" என்பார்.
"பொறை அணி குறைகள் தீர்ப்ப இன்று அரசு ஆய், பொறைக்கு
                               அணி ஆயினான்!" என்பார்.
"இறை அணி முடி கொண்டான்; இனி நாம் இவ் இறைக்கு
                                அணி ஆகுதும்!" என்பார்.

     "வேதத்தை அணிந்த தவத்தோனாகிய சூசை அரசு பெற்று, தானே
அவ்வேதத்திற்கு ஓர் அணிகலன் ஆயினான்!" என்பார் சிலர். "பிறை
அணிந்த மரியாளின் அழகைத் தன் தலைக்கு அணியாக மதித்து, அந்தப்
பிறைக்குத் தான் அணியாய் அமைந்தான்" என்பார் வேறு சிலர்.
"இவ்வுலகிற் பொருந்தியுள்ள குறைகளைத் தீர்ப்பதற்கென்று தான்
அரசனாகி, இவ்வுலகிற்குத் தான ஓர் அணியாயினான்!" என்பார் மற்றும்
சிலர். "நம் அரசன் அணிந்திருந்த முடியை இவன் தனதாகக் கொண்டான்;
இனி நாம் இவ்வரசனுக்கு ஓர் அணிகலன்போல் அமையுமாறு ஒழுகுவோம்!"
என்பார் இன்னும் சிலர்.