பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 855

                     121
பைம்மணி மலையின்மேற் பணிசெய் பாவையாய்
வெம்மணி யுருக்கொடு வேய்ந்தெண் விண்ணவர்
கைம்மணி தொழச்சிலர் சிலர்க லாநிதித்
துய்ம்மணிக் குறட்டினைச் சுமந்து தோன்றினார்.
 
பை மணி மலையின் மேல், பணி செய் பாவையாய்,
வெம் மணி உருக் கொடு வேய்ந்து, உண் விண்ணவர்,
கை மணி தொழ, சிலர் சிலர், கலாநிதித்
துய் மணிக் குறட்டினைச் சுமந்து தோன்றினார்.

     பசுமையான மரகத மணியாலாகிய அம்மலையின்மேல், பணி விடை
செய்யும் பாவையர் போல, எட்டு வானவர், வெம்மையோடு எரிவது போன்ற
பவள மணியின் உருவோடு தோன்றித் தம் மணிக்கைகளால் தொழுது நிற்க,
மற்றும் சிற்சில வானவர், மதி போன்ற தூய மணியால் அமைந்த
அடிப்பீடத்தைச் சுமந்த வண்ணம் தோன்றினர்.

     செந்நிறம், நெருப்பின் தோற்றமாய், வெம்மை கருத நிற்றலின்,
செந்நிறப் பவள மணி 'வெம் மணி' எனப்பட்டது. திங்கள் தன் பதினாறு
கலைகளால் நிறைவு பெறுதலின், 'கலாநிதி' எனப்பட்டது. பைம்மணி -
பசுமை + மணி; பசு + மணி - பைசு + மணி - பை + மணி = பைம்மணி.

 
                     122
வையகத் தரசர்போன் வெற்றி வாகையா
மையகத்திருதலைப் பறவை யாகில
மொய்யகத் தலர்ந்தபொற் சிறகின் மொய்ம்புமேன்
மெய்யகத் தவத்தர சுயர்வி ளங்கினான்.
 

வையகத்து அரசர் கோன் வெற்றி வாசையாம்,
ஐ அகத்து திரு தலைப் பறவை ஆகிலம்
மொய் அகத்து அலர்ந்த பொற் சிறகின்
மொய்ம்பு மேல், மெய் அகத் தவத்து அரசு உயர் விளங்கினான்.