127 |
வாட்டிய
வுடற்குயிர் வளர்ந்த மாட்சியைக்
காட்டிய முகநகைக் கதிர்ப்பொற் பாவைக
ளீட்டிய கனிகொணர்ந் தெனத்தென் மேற்றிசை
பூட்டிய கற்பொடு தவம்பொ லிந்தவே. |
|
வாட்டிய உடற்கு
உயிர் வளர்ந்த மாட்சியைக்
காட்டிய முக நகைக் கதிர்ப் பொற் பாவைகள்,
ஈட்டிய கனி கொணர்ந்து என, தென் மேல் திசை,
பூட்டிய கற்பொடு, தவம் பொலிந்தவே. |
தவத்தால்
வாட்டிய உடலுக்குத் தக்கவாறு உயிர் வளர்ச்சியடைந்த
மாட்சியை எடுத்துக்காட்டிய முக மகிழ்ச்சியோடு கூடிய கதிரொளி
கொண்ட இரண்டு பொற் பாவைகள், தாம் திரட்டிச் சேர்த்த கனிகளைக்
கொணர்ந்தாற் போல, தென்மேற்குத் திசையில், பொருந்திய கற்போடு
தவத்தையும் வரமாகக் கொண்டு பொலிவுடன் நின்றன.
128 |
பெண்ணுருக்
காட்டியுட் பெருகு மாண்மையில்
வண்ணுருக் காட்டுபொற் கவச மார்பணிந்
தொண்ணுருத் தொடைகொணர் பொறையு மூக்கமும்
விண்ணுருக் கொடுவட மேற்கு வேய்ந்தவே. |
|
பெண் உருக் காட்டி,
உள் பெருகும் ஆண்மையில்
வண் உருக் காட்டு பொற் கவசம் மார்பு அணிந்து,
ஒண் உருத் தொடை கொணர் பொறையும் ஊக்கமும்,
விண் உருக் கொடு வடமேற்கு வேய்ந்தவே. |
பெண்
உருவம் காட்டி, உள்ளே பெருகும் ஆண்மையின் வளமான
உருவத்தை வெளியே காட்டும் பொற்கவசத்தை மார்பில் அணிந்து கொண்டு,
ஒளி உருவமாக அமைந்த மாலையைக் கைகளில் ஏந்திக் கொணரும்
பொறுமையும் ஊக்கமும் வரமாய் அமைய, விண்ணுலகிற்குரிய
உருவங்கொண்டு வேறு இரண்டு பாவைகள் வட மேற்கில் பொலிந்து
தோன்றின.
பொறுமையும்
ஊக்கமும் வரமென்பதும், வேறு இரண்டு பாவைகள்
என்பதும் வருவித்து உரைக்கப்பட்டன.
|