மின்னக்
கதிர்வா யுருக்காட்டி
வியந்தி யாருங் கைவிதிர்ப்பப்
பொன்னற் கலத்தின் மதப்பெய்பற்
புனையற் கொணர்ந்திவ் வுரை கொண்டார். |
|
மன்னக் களிப்போடு
இவை ஆகி, வான் வாழ்வான் இங்கு அரசு
உற்றான்
என்ன, காண அவ்வுலகின் இறைவர் மொய்த்தார் என, வானோர்,
மின்னக் கதிர் வாய் உருக்காட்டி, வியந்து யாரும் கை விதிர்ப்ப,
பொன் நற் கலத்தில் மதுப் பெய் பல் புனையல் கொணர்ந்து, இவ்
உரை
கொண்டார்: |
களிப்போடு
இவை நிலைபெற நிகழ்கையில், வானுலகில் வாழும்
சூசை இம்மண்ணுலகிலும் அரசு பெற்றானென்று தெரிந்து, வானவர்
அவ்வுலகின் அரசர்கள் அவனைக் காண வந்து திரண்டாற் போல, கதிர்
பொருந்திய தம் உருவம் மின்னக் காட்டி, அங்கு நின்ற மக்கள் யாவரும்
வியந்து தம் கைகளை அசைத்துநிற்க, தேனைப் பொழியும் பல
மாலைகளைப் பொன்னாலாகிய நல்ல கலன்களில் இட்டுக் கொணர்ந்து,
இவ்வாறு சொல்லலாயினர் :
131 |
வான் மேல்
மகுடம் புனைநாளில்
வரமா
தவன்றன் கொடிபூத்த
தேன்மேற் றளம் பா றறுநூறு
சேர்ந்த
மூவைந் திருமணிப்பூ
நூன்மேன் முறைநை யாதொடுத்த
நுண்மண்
ணாறா றணியிதென
மீன்மேல் விளங்கும் வளன்பதத்தில்
விரும்பிச்
சாத்தி மீண்டுரைத்தார். |
|
"வான் மேல்
மகுடம் புனை நாளில், வர மா தவன், தன் கொடி பூத்த,
தேன் மேல் தளம்பு, ஆறு அறு நூறு சேர்ந்த மூ ஐந் திரு மணிப்
பூ,
நூல் மேல் முறை நையா தொடுத்த நுண் மண் ஆறு ஆறு இது" என
மீன்
மேல் விளங்கும் வளன் பதத்தில் விரும்பிச் சாத்தி, மீண்டு உரைத்தார்
|
|