பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 861

     வரங்கொண்ட பெருந் தவத்தோனாகிய சூசை, வானுலகத்தில் முடி
புனைந்து கொண்ட நாளில், திருமணத்தின்போது தன் கைக் கொடியில்
பூத்தனவும், தேன் நிறைந்து மேலே தளம்புவனவுமான ஆறு அறுநூறோடு
சேர்ந்த மூவைந்துமாக மூவாயிரத்து அறுநூற்றுப் பதினைந்து அழகிய
மணிப்பூக்களைக் கொண்டு, நூல் முறை வழுவாமல் தொடுத்து அணிந்த
ஆறாறு முப்பத்தாறென்று அமைந்த மாலைத் தொகுப்பு இது" என்று கூறி,
விண்மீனினும் சிறந்து விளங்கும் சூசையின் அடியில் விரும்பிச் சாத்தி,
மீண்டும் பின்வருமாறு கூறினர் :

     ஆறறு நூறு சேர்ந்த மூவைந்து : 6 வூ 600 + 3 வூ 5 : 3600 +
15 : 3615. ஆறாறு 6 வூ 6 = 36. முன் இப்படலத்தும் திருமணப் படலத்தும்
குறித்த செய்திகளை நினைவிற் கொண்டு, வேண்டிய சொற்கள்
விரித்துரைக்கப்பட்டன.

 
               132
நாம்பா வணிப்பூங் கொடிபூத்த
     நறும்பூ வனைய சொன்மலராற்
காம்பா வணிவில் வீசியதன்
     கன்னித் துணைவி, களித்திசைத்த
தேம்பா வணியிஃ திதையணிவார்
     திருவீட் டுயர்வா ரவ்விருவர்
சாம்பா வணித்த மைந்தனோடார்
     தயையிற் காப்பா ரெனமறைந்தார்.
 
"நாம்பா அணிப் பூங் கொடி பூத்த நறும் பூ அனைய சொல் மலரால்
காம்பா அணி வில் வீசிய தன் கன்னித் துணைவி, களித்து இசைத்த
தேம்பா அணி இஃது; இதை அணிவார் திரு வீட்டு உயர்வார்! அவ்
                                        இருவர்,
சாம்பா அணித் தம் மைந்தனோடு ஆர் தயையின் காப்பார்!" என
                                        மறைந்தார்.

     "கெடாத கற்பென்னும் அணி ஒளி வீசிய தன் கன்னித் துணைவி, தன்
இளைக்காத அணியாகிய மலர்க்கொடியில் பூத்த மணமுள்ள மலர் போன்ற
சொல்லாகிய மலரால் களிப்புடன் இணைத்துக் கட்டிய வாடாத மாலை
இது : இதனை அணிவார் வானுலக வீட்டில் உயர்வு பெறுவார்!
அக்கன்னியும் சூசையுமாகிய இருவரும், ஒடுங்காத அணி போன்ற தம்
மகனோடு சேர்ந்து, நிறைந்த தயவோடு அவரைக் காப்பார்!" என்று கூறி
மறைந்தனர்.