"ஆகையால்,
வானரசாளாகிய மரியென்பாள் வான்மேல் வழங்கு
மொழியால் தேம்பாவணி என்னும் சூசைதன் சரிதை முன் சொன்ன அளவு
முப்பத்தாறு படலமாக மூவாயிரத்து அறுநூற்று ஒருபத்தைந்து பாட்டென்று
அறிக" என்பது, பழையவுரை அடிக்குறிப்பு. "தேம்பாவணி' என்பதனை,
பூங்கொடி பூத்தநறும்பூவால் தொடுத்ந 'வாடாத மாலை' எனவும், நறும்பூ
அனைய சொல் மலரால் இசைத்த 'தேம்பாவணிக் காப்பியம்' எனவும்
கொள்க.
133 |
திருவாய்
மணித்தேன் மலர்சேர்த்த
தேம்பா
வணியைத் தொழுதேந்தி
மருவாய் மணிப்பூம் வயனாடு
வடுவற்
றுய்ய வீங்குற்றே
னுருவாய் வேய்ந்த வென்னிறையோ
னுடன்மூ
வரின்பொற் பதத்தணிய
வெருவாய்ப் புன்சொல் லஞ்சியபின்
விருப்பந்
தூண்டத் தொழுதணிந்தேன். |
|
திருவாய் மணித்தேன்
மலர் சேர்த்த தேம்பாவணியைத் தொழுது ஏந்தி,
மருவாய் மணிப்பூ வயல்நாடு வடு அற்று உய்ய ஈங்கு உற்றேன்,
உருவாய் வேய்ந்த என் இறையோனுடன் மூவரின் பொற் பதத்து அணிய,
வெருவாய்ப் புன்சொல் அஞ்சிய பின், விருப்பம் தூண்ட, தொழுது
அணிந்தேன்.
|
அக்
கன்னிமரியாள்தன் திரு வாயினின்று பிறந்த அழகிய சொல்
மலரால் சேர்த்துத் தொடுத்த தேம்பாவணி என்னும் சூசையின் வரலாற்றைத்
தொழுது ஏந்திக் கொண்டு, மணம் பொருந்திய அழகிய பூக்கள் நிறைந்த
வயல்களைக் கொண்ட இத்தமிழ் நாடு பாவ வடுவினின்று நீங்கி வாழும்படி
இங்கு வந்தடைந்த நான், மனித உருவாய் வந்து தோன்றிய என்
ஆண்டவனாகிய திருமகனுடன், கன்னி மரியாளும் சூசையுமாகக் கூடிய
அம்மூவரின் பொன்னடிகளில் ஒரு காப்பியமாக அணியுமாறு எண்ணி,
|