பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 863

எனது புன்சொல்லைக் கருதி நடுக்கத்தோடு அஞ்சி வாளாவிருந்தபின்,
அவ்விருப்பம் மேன்மேலும் என்னைத் தூண்டவே, இதனை இயற்றி
அம்மூவர் அடியைத் தொழுது சூடினேன்.

     "ஆகையால், தேவதாய் முன் வாய்மொழியாற் சொன்ன
தேம்பாவணியைப் பொருளும் பிறழாது அளவும் மாறாது தானும் தமிழ்
மொழியாற் சொன்னது என்பதாயிற்று என்க" என்பது பழையவுரை
அடிக்குறிப்பு.

                 முடிசூட்டு படலம் முற்றும்

            ஆகப் படலம் 36க்குப் பாடல்கள் 3615

     அநாதி நாமத்துப் பெரிய நாயகி துணையால், அவதரித்த நாதனை
வளர்த்த கைத்தாதை வளன் என்னும் சூசைதன் சரிதையாகிய தேம்பாவணி
நன்றாக முடிந்தது.

     தன் மணத்துணையாய் நின்ற சூசை மாமுனி சரிதை முன்
உரைத்தவளாய், பின் உரை தந்து ஈங்கு உரைப்பித்தவளாய், எக்கலை
அனைத்தும் விளைவித்து உணர்த்தும் கிழத்தியாகிய மரியாயி என்பாள்,
வானுலகு உவப்ப, பூவுலகு உயிர்ப்ப, தீயுலகு அஞ்சித் திறம் இழந்து ஏங்க,
அவதரித்த நாதனைக் கன்னி மாறாது ஈன்ற 1729 - மாண்டில், அவள்தான்
ஒளி நிறை பிறையென இப்பூவுலகு இருள் ஒழியப் பிறந்த திருநாள்
முகிர்த்தத்து, அவள் தன் திரு மலர்ப் பாதத்து அணியென, தேம்பாவணி
உரை முடிந்தது. ஆகையால், புறவுரை காட்டுதும்.