பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 87

      வெண்ணிறமான கண்ணாடி தன்மீது பட்ட செங்கதிர் ஒளியை
மீண்டும் பகலவன் மீதே போகவிடும். அதுபோல, எலிசபெத்தை
ஆசையோடு தன்மீது இட்ட புகழ் தன் ஆண்டவனையே சென்று சேருமாறு
கன்னிமரியாளும் ஓதித் திருப்பிவிட்டாள்.

                  மரியாள் புகழ்ச்சிக் கீதம்

 
                  40
தெருளா றெளிந்த வென்னுளமென்
     றிருநா யகனைப் புகழ்ந்திறைஞ்ச
வருளா லுயரென் னுயிரென்னை
     யளித்தோன் முகத்திற் கெழுந்துவப்ப
மருளா றளர்ந்த விவ்வடிமை
     மனந்தா னிரங்கிப் பார்த்ததயைப்
பொருளா லெவரு முறைமுறையாற்
     புகழுற் றென்னைச் செல்வியென்பார்.
 
''தெருளால் தெளிந்த என் உளம் என் திரு நாயகனைப் புகழ்ந்து
                                      இறைஞ்ச
அருளால் உயர் என் உயிர் என்னை அளித்தோன் முகத்திற்கு
                                      எழுந்து உவப்ப,
மருளால் தளர்ந்த இவ் அடிமை மனம் தான் இரங்கிப் பார்த்த
                                      தயைப்
பொருளால் எவரும் முறை முறையால் புகழுற்று என்னைச்
                                      செல்வி என்பார்.

      ''ஞானத்தால் தெளிந்த என் உள்ளம் என் ஆண்டவனைப் புகழ்ந்து
வணங்கும். அவன் அருளால் உயர்ந்த என் உயிரோ என்னைக் காத்த
அவன் முகத்திற்கு முன்பாக எழுந்து மகிழும். மயக்கத்தால் தளர்ந்த
இவ்வடிமையை அவன் மனம் இரங்கிப் பார்த்த தயவின் பொருட்டு
எல்லோரும் தலைமுறை தலைமுறையாக என்னை அருட்செல்வி என்று
புகழ்ந்து போற்றுவர்.

 
                 41
விண்பால் முதன்மூ வுலகசைக்கு
     மிடலின் மிக்கோ னென்னிடத்துத்
திண்பால் வளமே செய்தமையாற்
     றிருத்தன் னாமம் புகழ்படவே