நண்பா
லிணையாக் குணத்தொகையோ
னயந்தெஞ்
ஞான்று முறையெஞ்சா
மண்பால் தன்னைத் தொழுதஞ்சு
மக்கட்
கேதான் றயைசெய்வான். |
| |
''விண்பால்
முதல் மூவுலகு அசைக்கும் மிடலின் மிக்கோன்
என்னிடத்துத்
திண் பால் வளமே செய்தமையால் திருத் தன் நாமம்
புகழ்படவே.
நண்பால் இணையாக் குணத் தொகையோன் நயந்து
எஞ்ஞான்றும்
முறை எஞ்சா
மண்பால் தன்னைத் தொழுது அஞ்சும் மக்கட்கே தான் தயை
செய்வான். |
''விண்ணுலகம்
முதலிய மூன்று உலகங்களையும் அசைக்கும் வலிமை
மிக்க ஆண்டவன் என்னிடத்து உறுதியான நன்மை வளங்களைச்
செய்தமையால் அவனது திருப்பெயரே புகழப்படுவதாகும். அன்பால் தனக்கு
இணையற்று, நற்குணங்களெல்லாம் ஒன்றாகத் தன்னிடத்துக் கொண்ட
ஆண்டவன் விருப்புற்று எந்நாளும் முறை தவறாமல், மண்ணுலகில்
தன்னைத் தொழுது அஞ்சி நடக்கும் மக்களுக்கே அருள் செய்வான்.
| 42 |
கேழ்வார்
தடக்கை வலிகாட்டிக்
கிளர்தீ
யுணர்விற் செருக்குளத்துச்
சூழ்வார்ச் சிதைத்தான் வயத்துயர்ந் தோர்த்
துகள்செய்
நிவப்பி னூக்குகின்றான்
றாழ்வா ருயர்த்தான் பசித்தயர்வார்ச்
சால
நிறைத்தான் றிருமல்கி
வாழ்வார் வறியோ ராக்குகின்றான்
மாறா
நீதி வயமிக்கோன். |
| |
''கேழ்வார்
தடக்கை வலிகாட்டிக் கிளர் தீ உணர்வின் செருக்கு
உளத்துச்
சூழ்வார்ச் சிதைத்தான்; வயத்து உயர்ந்தோர்த் துகள் செய்
நிவப்பின் நூக்குகின்றான்;
தாழ்வார் உயர்த்தான்; பசித்து அயர்வார்ச் சால நிறைத்தான்;
திருமல்கி
வாழ்வார் வறியோர் ஆக்குகின்றான், மாறா நீதி வயம் மிக்கோன். |
|