|
ஆபிரகாமுக்கும்,
அவன் வழி வந்த இறைவாக்கினர் (Prophets)
மூலமாகவும் அறிவித்த வண்ணம், ஆண்டவன் மனிதனாக அவதரித்து
மீட்புப் பணியை நிறைவு செய்தல் இங்கே 'தயை' என்று குறிக்கப் பெற்றது.
| 44 |
இனைய
பலவு மிசைத் திசைப்ப
வின்பக்
கடலூ டுளமூழ்கத்
தனைய ரருளாற் றெளிந்தெதிர்ப்பிற்
றாய
ரிவ்வா றன்றுவந்தா
னனைய கொம்பார் குயிலன்ன
நயப்ப
வளர்தேய் மும்மதிமற்
றனைய ரினிதாங் குறைந்துற்ற
தனைத்து
மறைதற் கெவர்பாலார். |
| |
இனைய பலவும்
இசைத்து இசைப்ப இன்பக் கடல் ஊடு உளம் மூழ்க,
தனையர் அருளால் தெளிந்து எதிர்ப்பில் தாயார் இவ்வாறு
அன்று உவந்தால்,
நனைய கொம்பு ஆர்குயில் அன்ன நயப்ப, வளர் தேய்மும் மதி மற்று
அனையர் இனிது ஆங்கு உறைந்து, உற்றது அனைத்தும்
அறைதற்கு எவர் பாலார்? |
இத்தகைய
பலவற்றையும் இருவரும் தமக்குள் மாறி மாறிச் சொல்லி
மனம் இன்பக் கடலுள் மூழ்கினர். இவ்வாறு முதற் சந்திப்பிலேயே அத்
தாய்மார் தம் புதல்வர் அருளால் தெளிந்து அன்று மகிழ்ந்தனர்.
அப்படியானால், சந்திரன் மூன்று தடவை வளர்ந்து தேயுமட்டும் அவர்கள்
இன்பமாக அங்கே தங்கியிருந்து, அரும்புகள் நிறைந்த கொம்பில்
அமர்ந்திருந்த குயில்களைப் போன்ற இனிமையோடு அடைந்த மகிழ்ச்சியை
யெல்லாம் எடுத்துக்கூற வல்லவர் யார்?
'தனையர்
அருளால்' எனப் பொதுப்படச் சொல்லியிருப்பினும் அருள்
தந்தவன் மரியாள் புதல்வன் எனவும், அருள்பெற்றவன் எலிசபெத்தை
புதல்வன் எனவும் கொள்க. தனையர் - தனயர். மும்மதி - முத்திங்கள் :
மூன்று மாதம்.
|