பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 91

                   கருணையன் பிறப்பு

 
              45
அங்கட் படர்வான் செஞ்சுடர்முன்
     னருகே சுங்க னுதித்ததுபோ
லிங்கட் சுடரொத் தவதரித்த
     விறைவன் பிறக்கு முன்னெவருந்
தங்கட் சிறுமை தீர்ந்ததெனத்
     தகுங்கா ரணங்கா ணாதுவப்பத்
திங்கட் குழவிக் கோட்டுருவிற்
     சிறந்தத் தோன்றல் தோன்றினனால்.
 
அம்கண் படர் வான் செஞ்சுடர் முன் அருகே சுங்கன் உதித்தது போல்
இங்கண் சுடர் ஒத்து அவதரித்த இறைவன் பிறக்கு முன், எவரும்
தம்கண் சிறுமை தீர்ந்தது எனத் தகும் காரணம் காணாது உவப்ப,
திங்கட் குழவிக் கோட்டு உருவின் சிறந்து அத் தோன்றல்
                                      தோன்றினன் ஆல்.

      அழகிய இடம் பரந்த வானத்தில் ஞாயிறு உதிக்கு முன் அருகே
விடிவெள்ளி உதித்தது போல், இவ்வுலகில் ஒரு ஞாயிறு போல் அவதரித்த
ஆண்டவன் பிறக்கு முன்னே கருணையன் பிறந்தான். உலகிலுள்ள யாவரும்
தங்கள் சிறுமையெல்லாம் தீர்ந்ததுபோல, அதற்குத் தகுந்த காரணத்தை
அறியாமலே மகிழ்ந்தனர். அப்பொழுது, இரு புறம் கொம்பை உடைய இளம்
பிறையின் அழகு வடிவினும் சிறந்து அம்மகன் பிறந்தான்.

      
சுங்கன் - சுக்கிரன் : வெள்ளி. இங்கண் - இவ்விடம் :
மண்ணுலகம். திங்கட் குழவி - பிறைச்சந்திரன். தோன்றினனால் - 'ஆல்'
அசை.

 
              46
பிணித்த நரதே விறையவற்கே
     பீட மாக வனைந்தமதுப்
பணித்த கமலச் செங்கரத்திற்
     பயந்த மகவை யேந்தியருட்