குணித்த
கன்னி யணைத்தனகாற்
குழவிக்
கூட்டும் வரத்தொகையைக்
கணித்த திறத்தூட் டினளல்லாற்
கதிர்வா
னவரு மறிகுவரோ. |
| |
பிணித்த நர
தேவு இறையவற்கே பீடமாக வனைந்த மதுப்
பணித்த கமலச் செங்கரத்தில் பயந்த மகவை ஏந்தி, அருள்
குணித்த கன்னி அனைத்தன கால், குழவிக்கு ஊட்டும் வரத்
தொகையைக்
கணித்த திறத்து ஊட்டினள் அல்லால், கதிர் வானவரும்
அறிவேரோ? |
மானிட
இயல்பும் தெய்வ இயல்பும் ஒன்றாக இணைந்து
பிறக்கவிருந்த ஆண்டவனுக்கே பீடமாகச் செய்யப்பட்டதும், தேனை
உள்ளடக்கிய தாமரை மலரைப் போன்றதுமான தனது செந்நிறக் கைகளில்
மரியாள் எலிசபெத்தை பெற்ற மகனை ஏந்தினாள். அவனுக்கு அருள்
வழங்கக் கருதிய கன்னி மரியாள் அவனை மார்போடு அணைத்தாள்.
அப்பொழுது அவள் அக்குழந்தைக்கு ஊட்டிய வரங்களின் தொகையைத்
தான் கணக்கிட்ட தன்மையாக வழங்கினாளே யல்லாமல், இவ்வளவென்று
கதிரொளி சூடிய வானவரும் அறிவாரோ? அறியார்.
அணைத்தன
- 'அணைத்த' என்ற பெயரெச்சம் இடையே 'அன்'
சாரியை பெற்றது.
| 47 |
கனியே பார்த்தான்
றிருமுகத்தைக்
கண்டா
னுவந்தா னருட்குளித்தான்
றுனியே தீர்ந்தா னுரையுதவா
துள்ளித்
துதித்தா னுணர்வோங்கிப்
பனியே கிளர்பூங் கரத்தொல்கிப்
பணியச்
சிரத்தைக் கோட்டுகின்றா
னனியே வாழ்ந்தான் வரப்பவ்வ
நயப்பத்
தாழ்ந்தா னிளமூத்தோன். |
|