கனியே பார்த்தான்;
திரு முகத்தைக் கண்டான்; உவந்தான்;
அருள்
குளித்தான்.
துனியே தீர்ந்தான்; உரை உதவா, துள்ளித் துதித்தான்; உணர்வு ஓங்கிப்
பனியே கிளர் பூங் கரத்து ஒல்கி, பணியச் சிரத்தைக் கோட்டுகின்றான்.
நனியே வாழ்ந்தான்; வரப் பவ்வம் நயப்பத் தாழ்ந்தான்
இளமூத்தோன். |
அன்று பிறந்த இளங்குழந்தையாய்
இருந்தாலு, வரங்களாலும் அறிவாலும் மூத்தோன் என்னத் தக்க கருணையன் கன்னி மரியாளையே
பார்த்தான்; அவள் திரு முகத்தைக் கண்டான்; மகிழ்ந்தான்; அருள்
வெள்ளத்தில் குளித்தான். துன்பமெல்லாம் நீங்கப் பெற்றான்; பேச்சு
உதவவராமையால், துள்ளுவதன்மூலம் அவளைத் துதித்தான்; உணர்வு
ஓங்கப் பெற்று, அவளது குளிர்ச்சி பொங்கிய அழகிய கைகளுக்குள்
ஓங்கினான்; அவளை வணங்கிய தன்மையாய்த் தன் தலையை வளைத்தான்.
இவ்வாறு மிகுதியான நல்வாழ்வு பெற்றான்; வரங்களாகிய கடலினுள்ளே
இன்பமாக மூழ்கினான்.
கனி
- 'கன்னி' என்பதன் இடைக்குறை.
| 48 |
மெய்கொள்
மறைநூ னெறிவழுவா
விளைந்த
வுவப்பி லெட்டாநாட்
கைகொள் முறைகட் டிருந்தலொடு
கருணை
யன்பே ரிட்டனபின்
னைகொள் குழவி கருணையினா
லவிழ்நாப்
பரிவு தீர்ந்தவையன்
மொய்கொள் ளுணர்வோ டுரைகொண்டே
முதலோன்
மேல்வாய்த் துதிமுடித்தான். |
| |
மெய் கொள்
மறை நூல் நெறி வழுவா, விளைந்த உவப்பில்
எட்டாம்
நாள்
கைகொள் முறைகள் திருந்தலொடு கருணையன் பேர் இட்டன பின்,
ஐ கொள் குழவி கருணையினால் அவிழ் நாப் பரிவு தீர்ந்த ஐயன்,
மொய் கொள் உணர்வோடு உரை கொண்டே, முதலோன் மேல்
வாய்த்துதி முடித்தான். |
|