ஒழிபியல் வேற்றுமையியல் வினையியல் ஆகியவற்றுள் கூறப்படாத சொல் பற்றிய பல அருஞ்செய்திகள் இவ்வியலில் கூறப்பட்டுள்ளன. இச்செய்திகளுள் பல பிரயோகவிவேக நூலுள்ளும் உள்ளன. பொதுஎழுத்தானும்வடசிறப்பெழுத்தானும் தமிழ்வடமொழி என்றஈரெழுத்தானும் அமைந்தும், மொழி பெயர்த்தும் கொள்ளப்படும் ஆரியச் சொற்கள் தமிழில் வழங்குங்கால் பொது எழுத்துள் பொதுவாய்த் திரிந்தும், தமிழ்ச் சிறப்பெழுத்து ஐந்தானும் திரிந்தும், மொழி முதல் இடை கடை என்னும் மூன்றிடத்தும் தோன்றல் திரிதல் கெடுதல் என்ற விகாரங்களைப் பெற்றும் தமிழில் வடசொல்லாக வழங்கப்பெறும். தமிழ்ச்சொல் பொது எழுத்தானும் சிறப்பெழுத்தானும், ஈரெழுத்தானும் இலங்குமாயினும், ஆரியச்சொற்கள் அவ்வாறு வந்து தமிழில் வடசொல்லாக வழங்கும்போது அவற்றிற்குக் குறியீடு வழங்கினாற்போலத் தனித்தனிக் குறியீடுவழங்கப்பெறாமல் வரும். அதிகாரம், அவாய்நிலை, ஒரு சொல்லின் பொருளை நன்கு விளக்குதல், செய்யுள் விகாரம், இழிவுபட்டதாகிய இடக்கர் விளக்கம், அறுவகைப்பொருள்கள், அறுவகைத் தொகைகள், இடையில் உள்ளன எல்லாம் கெடுதல் முதலிய பல காரணங்களால் பொருத்தம் அறிந்து தனித்தனியே மொழிகளை வருவித்து முடிக்கும் நிலை ஏற்படும். அளபெடைகள் இயற்கையளபெடை, செயற்கையளபெடை, எழுத்துப்பேறளபெடை, இசைநூல் அளபெடை, ஒற்றுப் பேறளபெடை என ஐவகைப்படும். அவையே குற்றெழுத் |