பக்கம் எண் :

 வேற்றுமையில் - நூற்பா எண். 12, 13133

இனி வரும் 19 நூற்பாக்களான் எட்டு வேற்றுமைகளையும் முறையே விளக்கி ஒவ்வொன்றற்கும் தனித்தனியே புறனடை நூற்பாவும் அமைத்துள்ளார்.]

எழுவாய் வேற்றுமை உருபு பற்றிய பல கருத்துக்கள்

25எழுவாய் வேற்றுமைக்கு உருபே இன்று;1
பெயரே,2 பயனிலை கொள்ளும் தன்மையே,3
பயனிலை தன்னைக் கொண்ட தன்மையே,4
வினைமுதல் ஆதலே,5 விகாரப் பெயரே,6
பெயர்ப்பின் விகுதி பெறுதலே,7 ஆயவன்
ஆனவன் ஆவான் ஆகின் றவன்முதல்
ஐம்பால் சொல்லும் பெயர்ப்பின் அடைதலே8
உருபுஎன வெவ்வேறு உரைத்தார் பலரே.
 

எழுவாய்உருபு விதியை ஒரு சூத்திரத்தால் கூறுகின்றாம். ஈற்றசை ஒழிந்த ஏகாரம் எட்டும் தேற்றம். முன் நின்றது ஒழிந்த ஏகாரம் ஏழன் பின்னும் உருபு என்பதனை ஒட்டி, என உரைத்தார் என்பதனை என்பொருளினும் ஒட்டுக. என என்பதற்கு உம்மைகொடுத்து எட்டுஅடுக்கி உரைத்தார் என முடித்தலும்ஆம்.

[வி-ரை: ஈற்றசை - பலரே என்பதன்கண் உள்ள ஏகாரம். ஏனைய எட்டும் - உருபே, பெயரே, தன்மையே, தன்மையே, ஆதலே, பெயரே, பெறுதலே, அடைதலே என்பன.

பெயரே உருபு என உரைத்தார், பயனலை கொள்ளும் தன்மையே உருபு என உரைத்தார், பயனிலை தன்னை.... .... உரைத்தார், வினைமுதல் ஆதலே... ... உரைத்தார், விகாரப் பெயரே .... உரைத்தார், பெயர்ப் பின்விகுதி .. உரைத்தார், ஆனவன்.... ... அடைதலே ..... உரைத்தார் என்று பொருள் செய்க.

பெயரே எனவும், பயனிலை கொள்ளும் தன்மையே எனவும், பயனிலை தன்னைக்கொண்ட தன்மையே எனவும், வினைமுதல் ஆதலே எனவும், விகாரப்பெயரே எனவும், பெயர்ப்பின் விகுதி