பக்கம் எண் :

138இலக்கணக் கொத்து 

[வி-ரை: மூன்றன் உருபுகளுள் ஆல் ஆன் என்பனவும் ஓடு ஓடு என்பனவும் பொருத்தத்தானும் பொருளானும் பலவாயின ஐந்தன் உருபுகளாகிய இல், இன் என்பன பொருத்தத்தால் பலவாயின. ஏழன் உருபுகளாகிய புறம், அகம், கடை, இடை முதலியன பொருளால் பலவாயின. ஆறன் உருபுகளாகிய அது, அ-என்பன பாலால் பலவாயின.

உவம உருபுகளின் அன்ன - ஆங்க - என்ன - முதலியனவும், எள்ள - கள்ள - வெல்ல - முதலியனவும், ஒப்புப்பொருள் - உறழ் பொருள் என்ற பொருளானும், பொருத்தத்தானும் பலவாயின.

‘பிறிது பிறிது ஏற்றலும்...........வழிமருங்கு என்ப’.                   -தொ.சொ. 104

‘ஆறன் உருபும் ஏற்கும் அவ்வுருபே’.                                 -ந. 293

என்ற நூற்பாக்களால் ஆறாம் வேற்றுமை உருபு ஏனையஉருபுகளை ஏற்றல் பெறப்படும். ஆறாம் வேற்றுமை உருபு பெயர்த்தன்மைப்பட்டு ஏனைய உருபுகளை ஏற்கும் என்பது தொல்காப்பியனார் நன்னூலார் இலக்கண விளக்க ஆசிரியர் முதலாயினாருக்கும், உரையாசிரியர், சேனாவரையர் நச்சினார்க்கினியர் மயிலைநாதர் முதலாயினாருக்கும் உடன்பாடு.

இனி மரமானதை அறுத்தான், வாளானதால் வெட்டினான் முதலாக முதல் வேற்றுமை உருபு ஏனைய உருபுகளை ஏற்பதனை உட்கொண்டு சிவஞான முனிவர் ‘ஆறன் உருபும் ஏற்கும் அவ்வுருபே’ என்ற நூற்பாவில் அன் என்பதனை வேண்டாவழிச் சாரியையாகக் கொண்டு எழுவாய்வேற்றுமை உருபு ஏனைய ஆறு உருபுகளையும் ஏற்கும் என்று பொருள் செய்துள்ளதும் நோக்குக. ஆறன் உருபு ஏனைய உருபுகளை ஏற்கும் என்பது முனிவருக்கு உடன்பாடன்று.

ஐ, கு, இல், இன் என்பன நீங்கலான உருபுகள் பலவும் சொல்லாக இருத்தல் விளக்கப்பட்டது.

சாத்தன் வெட்டினான், பொருதான், நீங்கினான், அடிமை, வந்தான் என்றும்,