| வேற்றுமையில் - நூற்பா எண். 13 | 139 |
மக்கள் சொன்னார். உவரி ஒரித்தல், ஆற்றல் சான்று, ஆயன் சாத்தன் என்றும், உருபின்றிப் பெயராகிய எழுவாய் உருபுதானே பயனிலை கொண்டது என்று கொள்ளின் குற்றம் என் எனின், யான் வந்தேன், நீ வந்தாய் என்றாற்போல எழுவாய்ப்பொருள் படுதலன்றி, சாத்தனை வெட்டினான், சாத்தனொடு பொருதான், சாத்தற்குக் கொடுத்தான், சாத்தனின் நீங்கினான், சாத்தனது அடிமை, சாத்தன்கண் வந்தான் என்றும், மக்களைச்சொன்னார் உயர்திணை என்று, உவரிபோல் ஒலித்த ஒலி, ஆற்றற்குச்சான்று இந்திரன், ஆயனாகிய சாத்தன் என்றும் எழுவாயாகாமல் வேறு பொருள்படுதலின் குற்றம் என்க. இனி இவற்றை எழுவாய் ஆக்கவேண்டின், சாத்தனானவன் வெட்டினான், மக்களானவர் சொன்னார், உவரியானது ஒலித்தல், ஆயனாகின்றவன் சாத்தன் என உருபு கொடுத்தாலே எழுவாயாம் என்க. [வி-ரை: எழுவாய் உருபாகிய ஆனவன் முதலிய, பொருள் தெளிவு குறித்து இன்றியமையாதன என்பது இப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.] இனி இவ்வுருபின் பொருள்படப் பிறசொற்கள் வருவனவும் உள. இல்வாழ்வான் என்பான்துணை (கு. 41). எழுத்து என்பது ஒலி, என்பன - இல்வாழ்வான் ஆனவன்துணை, எழுத்தாவது ஒலி எனப் பொருள்படுதல் காண்க. பிறவும் அன்ன. [வி-ரை: ஆனவன் முதலிய உருபிற்குப் பரியாயச் சொற்களாக என்பான் முதலியனவும் கொள்ளப்படும்.] பலர் நூல்களிலும் பலர் உரைகளிலும் இங்ஙனம் பிறந்த உருபுகள் உருபு என்று பெயர்பெறாமல், பொருளை முடிக்கவந்த வாசகம் என்றும் சொல் என்றும் பெயர் பெற்று, முற்காலத்தே அமைந்தன என்றே கொள்க. அஃது அன்றாயின், இவ்வுருபு இன்றியமையாதது, ஆதலால், ‘கடிசொல் இல்லை’ (தொ. சொ. 452) ‘புதியன புகுதலும்’ (ந. 462) என்பனவற்றாலும், தேங்காய் முதலிய சொற்களைப் புதிதாக விதித்தலானும், தமிழிற்கு |