| பாயிரவியல் - நூற்பா எண். 11 | 119 |
இழிகுணம் நோக்கிப் போதகாசிரியர் என்னாது ‘இக் காலத்தார்’ என்றாம், தமக்கு யாதானும் ஒரு பொருளை நோக்கி ஒரோவழி உரைப்பினும் மனம் பொருந்தி உரையார் என்பது தோன்றக் கூறார் என்னாது ‘இசையார்’ என்றாம் பிறந்தவர் எல்லாம் இறப்பர், யாம்மாத்திரம் இருப்பேம் என்னும் கருத்தால் சொல்லார் என்பது தோனறவும், பிறர்க்கும் விளம்பார், தாமும் அனுபவியார் என்பது தோன்றவும், இழிவு சிறப்பிற்கும் இறந்தது தழீஇய எச்சத்திற்கும் பொதுவாகிய உம்மை கொடுத்துத் ‘தாமும்’ என்றாம். ‘கூறார் ஆயினும் குற்றமன்று, இருப்பாராயின் அனுபவிப்பாராயின்’ என்பது தோன்றவும், வாயுறைவாழ்த்து, செவியறிவுறூஉ முதலியவற்றான் நூல்கள் அறிவுறுத்தினும் அதன்வழி இறங்கார் என்பது தோன்றவும், ‘இசையார்’ என முப்பொருள் தோன்றக் கூறினாம், உயிர் நித்தியமாதலின் ‘பூமி’ என்றாம். முற்கூறிய கொத்து என்னும் பொருளை வலியுறுத்தற் பொருட்டுத் ‘திரட்டி’ என்றாம். நூல் என்னாது ‘பல’ என்றதனாலும், கற்றார் என்னாது ‘ஆய்ந்தார்’ என்றதனாலும், கற்க என்னாது ‘நோக்குக’ என்றதனாலும் இந்நூல் விதிகள் எளிதில் அகப்படும் என்று எண்ணற்க. இக்கருவிகள் இல்லோர் வெறுக்கத்துணிதற்பொருட்டு ஈற்றடி இரண்டும் வேண்டா கூறினம். அதனால் வேண்டியது முடிக்க. அது என்னெனின், இக்கருவி இல்லோர்க்குச் சில விதிகள் அகப்படுமாயினும், ‘தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம்’ கு - 249 ‘மழக் கைஇலங்கு பொற்கிண்ணம்’ - திருவா. திருச்சதகம். 92 போலும் என்க. [வி-ரை: பண்டைக்காலப் போதகாசிரியர் அரியவிதிகளும் வழக்கிறவாது நிலவல் வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பாடஞ் சொல்லினர். இக்காலத்துப் போதகாசிரியர்களோ பாடம் சொல்லும் தேவை ஏற்படும்போதும் மனம் பொருந்திப் பாடம் சொல்லார். ‘மற்றவர் யாவரும் இறப்பர்; யாம் மாத்திரம் பலகாலும் வாழ்வோம்’ என்னும் கருத்தாலும், பிறருக்கு விளம்பாமையோடு தாமும் அனுபவியார் என்னும் கருத்தாலும், வாயுறைவாழ்த்து செவியறிவுறூஉ முதலியவற்றால் நூல்கள் |