| | பாங்க னிற்பயில் பண்ணையின் | | | நீங்கு வேலவ னேரிழைப் | | | பாங்கி யிற்பயில் பண்ணையும் | | | ஆங்க ணாற்ற வமர்ந்தனன். |
(இ - ள்.) பாங்கனாலே பொருந்திய விளையாட்டினின்றும் நீங்கப் பெற்ற வேற்படையையுடையான் நேரிய அணிகலன்களை அணிந்த தலைவியின் உயிர்ப்பாங்கியினாலே பொருந்திய விளையாட்டினையும் செய்ய விரும்பினனென்க. (வி - ம்.) பயிறல் - பொருந்தல். பண்ணை - விளையாட்டு. இதனைக் "கெடவரல் பண்ணையாயிரண்டும் விளையாட்டே" என்னும் தொல். சொல். உரி. சூத்திரத்தானறிக. அமர்தல் - விரும்பல். (189) வேறு கேழிலைவேலோன் தோழியை யடுத்தல் அஃதாவது இனி நீ வருஞான்று தோழியுடன் வருகெனப் பணித்த தலைவன் அவள் கண்காட்டத் தோழியை அறிந்து கூட்டம் நிகழும்வண்ணம் அவளைச் சென்றணையாநிற்றல். | | எய்யா மினித்தமி யேசென் றிளமரக் காவகத்து | | | மையா ரளக மதிநுத லாளை மருவும்வகை | | | கையா லமிழ்தங் கனிவாய் மடுத்தல் கடுப்பவின்னே | | | நையா தவளுயிர்ப் பாங்கியி னண்ணுது நன்னெஞ்சமே. |
(இ - ள்.) நல்ல நெஞ்சே மேகம்போன்ற குழலினையும், மதியினைப் போன்ற நுதலினையும் உடையாளை இனிக்கூடும் வண்ணம் இளமரக் காவினுட்டனியே சென்று இளைத்தல் செய்யாம். கனிபோன்ற வாயினிடத்துக் கையானே தேவாமிர்தினை உண்ணுதலை யொப்ப இப்பொழுதே வருந்தல் செய்யாது அத்தலைவியின் உயிர்போன்ற பாங்கியாலே அடைவோமென்க. (வி - ம்.) எய்த்தல் - இளைத்தல். இளமரக்கா - உய்யானம். மை - மேகம். மடுத்தல் - உண்ணல். நையாது - வருந்தாமல். நண்ணுதும் - அடைவோம் : தன்மைப்பன்மை வினைமுற்று. மெய்ப்பாடு : அழுகையைச்சார்ந்த பெருமிதம். பயன் : (தோழிக்குணர்த்தி முடிப்பனெனக் கருதி) ஆற்றாமை நீங்குதல். (190) பாங்கியைக் கண்டவன் பகரவலித்தல் அஃதாவது பாங்கியைக் கண்ட தலைவன் தன்னுள்ளக் கருத்தைச் சொல்ல வலித்தல். | | உடங்கிய மெய்யுயி ரூழின் பகுதி யுணர்ந்துறுத்தத் | | | தொடங்கிய மொய்யருள் வீராட்ட காசத் துணைமுதல்போல் |
|