பக்கம் எண் :

1004தணிகைப் புராணம்

 நுடங்கிய நுண்ணிடை மாதொடெம் பானுவ லாதவின்பம்
 அடங்கிய முன்னிற்கு மாயிழைத் தோழிக் கறைகுதுமே.

(இ - ள்.) (சேறும் நீரும்போல்) உடலினிடத்து வேறுபாடின்றிப் பொருந்திய உயிரினுக்குப் பால்வரை தெய்வத்தான் (இன்னகாலத்து இன்னின்ன பயனை நுகரவேண்டுமென்று நியமித்த) பகுப்பினை உணர்தல்செய்து (அவ்வுயிர்கள்மாட் டப்பயனை) உறுவிக்கத் தொடங்குகின்ற வீராட்டகாசமென்னும் தலத்தெழுந்தருளியுள்ள மிக்க வருளினோடு கூடிய (உயிர்களுக்குத்) தோன்றாத் துணையாகிய முதல்வனைப் போன்று வளைகின்ற நுண்ணிய இடையினையுடைய இத்தலைவியுடன் எம்மிடத்து (இன்னதன்மைத்தென ஒருவருஞ்) சொல்லவியலாத இன்பும் அடங்க முற்பட்டு நிற்கும் ஆராய்ந்த அணிகலன்களையுடைய தோழிமாட்டு அறைவோ மென்றானென்க.

(வி - ம்.) உடங்குதல் - பொருந்துதல். உறுத்தல் - சேர்த்தல். அடங்கிய - அடங்க. எச்சத்திரிபு. மெய்ப்பாடு : அழுகையைச்சார்ந்த பெருமிதம். பயன் : உடம்படுத்தற் கொருப்படுத்தல்.

(191)

ஊர்வினாதல்

அஃதாவது தோழியை மதியுடம்படுத்த நினைத்த தலைவன் கிளி யோட்டுகின்ற அம்மாதினை நோக்கி நும்மூர் யாதென வினாவாநிற்றல்.

 கற்றைக் கவரி மயிர்வேய்ந் தகத்துக் கடிப்புழுகு
 முற்றக் கலவி வழித்து முதிர்சந் தகில்புகைத்திட்
 டெற்றைக்கும் விண்ணொத் திருக்குநும் மூரெது வேந்துகவண்
 சுற்றிக் கிளிகடி யுந்தொடித் தோட்டுவர் வாய்க்கிளியே.

(இ - ள்.) கையின்கட்டங்கிய கவணைச்சுழற்றுதல் செய்து (கதிரினைக் கொய்யும்) கிளிகளையோட்டுகின்ற பவளம்போன்ற வாயினையுடைய கிளிமொழியன்ன மொழியினையுடையவரே. கவரிமாவின் கூட்டமாகிய மயிர்த்தொகுதியான் வேயப்பெற்று உள்ளால் நறுமணமுள்ள புழுகினி னிறையக்கலந்து மெழுகல்செய்து முதிர்ந்த சந்தின் துண்டத்தினையும் அகிற்றுண்டத்தினையும் புகைத்தலான் எக்காலத்தும் விண்ணுலகினை யொக்கும் நும்மூர் யாது கூறுவிராக
வென்றானென்க.

(வி - ம்.) வேய்தல் - மேய்தல். முற்றி - நிறைய. கலவி - கலந்து. வழித்தல் - திருமெழுக்கிடல். சந்து, அகில் : ஆகுபெயர்கள். துவர் - பவளம். மெய்ப்பாடு : இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன் : மதியுடம் படுத்தல்.

(192)

வழிவினாதல்

அஃதாவது ஊர்வினாவாநின்றவன் கருத்து வேறென்று தோழி அறிய அதனோடு மாறுபட நின்று நீவிர் ஊர் கூறீராயினும் நும்மூர்க்குச் செல்லும் நெறி கூறுமினென்று வினாவாநிற்றல்.

 குழைவளர் காது மறியக் குளிர்முகஞ் சூழ்ந்தசைய
 வழைவளர் சாரற் றினைப்புனங் காக்கு மடக்கொடியே