| | முழைவளர் குன்றத்து நும்மூர் மொழிந்திலை யேனுமவ்வூர்க் | | | கழைவளர் முத்தங் கனையிருண் மேய்நெறி காட்டுகவே. |
(இ - ள்.) குழை வளர்கின்ற காதுமடங்கலான் அக்காது குனிந்த முகத்தினிடத்துச் சுற்றுதலுற் றசையாநிற்கச் சுரபுன்னைமரங்கள் வளர்கின்ற மலைப்பக்கத்துள்ள தினைப்புனத்தினைக் காவல் செய்யும் இளமை பொருந்திய கொடிபோல்பவளே, குகைகள் வளருகின்ற மலையின்கண்ணுள்ள நுங்கள் ஊரினிச் சொல்லாய் ஆயினும் அவ்வூரின்கண் மூங்கிலினிடத்து உளவாகும் முத்துக்கள் செறிந்த இருளினை யோட்டுகின்ற வழியினைக் காட்டுக வென்றா னென்க. (வி - ம்.) கொடியே மொழிந்திலை என ஒருமையாகக் கூறியவன் நும்மூர் என்றது யானெம்மூர்புகுவல் நீ நும்மூர் புகுவை என்றாற் போலக் கொள்க. குழை - காதணி. வழை - சுரபுன்னை. முழை - மலைக் குகை. கழை - மூங்கில். மெய்ப்பாடு : இளிவரலைச்சார்ந்த பெருமிதம். பயன் : மதியுடம்படுத்தல். (193) பெயர்வினாதல் அஃதாவது வழிவினாவவும் அதற்கொன்றுங் கூறாதாரை நும்மூர்க்கு வழி கூறல் பழியாயின் அதனை யொழிமின். நும்பெயர் கூறல் பழியன்றே ! அதனைக் கூறுவீராகவென்று பெயர் வினாவாநிற்றல். | | பதியும் பதியாப் பதிநெறி யும்பதி சேர்நெறியாப் | | | பொதியுங் கருத்தினை யோபுக லாயது போகமணி | | | நிதியுந் தருவு மொருங்குருக் கொண்டன்ன நேரிழையாய் | | | வதியும் பெயரினை யேனுந் தெரிப்ப மதிப்பதுவே. |
(இ - ள்.) நீங்கள் வாழ்கின்ற பதியும் (பிற்றைநிலை முனியாது வழிபாடியற்றி நின்றாற்குச் செவியறிவுறுக்கும்) இறைவனிலக்கணமாக (நும்பதிக்குச்) செல்கின்ற வழியினை இறைவனை யடைதற்கேதுவாகிய சன்மார்க்க விலக்கணமாக மறைத்துச் செவியறிவுறுக்குங் கருத்தினையுடையாய் போலும் ஒன்றும் சொல்லுகின்றிலை அது கிடக்கச் சிந்தாமணியும் பதுமசங்க முதலா நிதிகளும் ஐந்தருக்களும் ஒன்றுபட்டு வடிவு கொண்டதனை யொத்த நேரிய அணிகலன்களை யணிந்தவளே நுங்களிடத்துத் தங்கும் பெயரினையாயினும் தெரிவிக்கும் பொருட்டு யாம் மதித்ததென்க. (வி - ம்.) பதிமுன்னது ஊர்பின்னது இறைவன். பதிவழி - ஊர்க்குச் செல்லும்வழி. பின்னது இறைவனையடையும் சன்மார்க்கம். பொதிதல் - பக்குவான்மாக்களுக்குணர்த்தி ஏனையோர்க்கு மறைத்துக்கூறல். வதிதல் - தங்கல். மெய்ப்பாடு : இளிவரலைச்சார்ந்த பெருமிதம். பயன் : மதியுடம்படுத்தல். (194) வேழம் வினாதல் அஃதாவது குறையுறத் துணியாநின்றவன் என்குறையிஃதென்றிவட்கு வெளிப்படக் கூறுவேனாயின் மறுக்கவுங் கூடுமென வுட் கொண்டு குறை இஃதென இவடானே உணரும் வண்ணம் கரந்தமொழி |