| யாற் சில சொல்லிக் குறையுறல் காரியமென வேட்டை கருதிச் சென்றானாய் அவருழைச் சென்று தன்காதல் தோன்ற யானெய்த வேழம் வரக் கண்டீரோவென வினாவா நிற்றல். | | பவளத் திருவுரு வீசன் றணிகைப் பதிக்கரையன் | | | தவளத்த நீறணி வீராட்ட காசத் தனிமுதன்மேல் | | | கவளத்தின் வீங்கிக் கடுகிய வேழங் கடுக்குமுவாத் | | | துவளத் தொடுத்துவிட் டேன்வந்த தோவிங்குத் தூநகையே. | (இ - ள்.) பரிசுத்தமான பற்களையுடையவளே, பவளம்போன்ற திருவுருவினையுடைய இறைவன் தணிகையம்பதிக்கு அரையன் வெண்ணிறம் பொருந்திய நீற்றினையணிந்த வீராட்டகாசத்தின் கண்ணெழுந்தருளிய ஒப்பற்ற முதல்வன்மேல் தாருகாவனத்து இருடிகளால் விடப்பட்டு (உட்கொள்ளும்) உணவு காரணமாகப் பெருத்தல் செய்து விரைந்து சென்ற யானையினை ஒத்ததொரு யானையை யான் வாடும் வண்ணம் கணையினைத் தொடுத்தல் செய்து போக்கினேன். அஃது ஈண்டுப்போந்ததோ கூறுவாய் என்றானென்க. (வி - ம்.) தவளம் - வெண்மை. கவளம் - யானை உணவு. முதல்வன் மேல் தாருகவனத்து இருடிகளால் விடப்பட்டுக் கடுகிய வேழம்போன்ற யானை என்க. கடுகிய - விரைந்த. உவா. யானை துவள - வாட. ஓகாரம் - வினா. மெய்ப்பாடு : இளிவரலைச்சார்ந்த பெருமிதம். பயன் : மதியுடம்படுத்தல். (195) கலைவினாதல் அஃதாவது வேழம் வினாவி உட்சென்ற பின்னர் கண்ணாலிடர்ப் பட்டமை தோன்ற வாவித்திரிகின்ற விழியுடையாளே இறைவன்றிருக்கையில் வாவித்திரிகின்ற மானையொத்த மானை யெய்தேன். என் கணையோடு ஒருங்கு கண்டீரோ வென வினாவா நிற்றல். | | காவித் தடவரை யுள்ளுந ருள்ளக் கரிசுமுற்றும் | | | மேவித் தணித்தருள் வீராட்ட காச விமலனங்கைத் | | | தாவித் தழங்கு மறியொத்த மானென் சரத்தொடிங்கண் | | | வாவித் திரிவிழி யாய்வந்த தோவுள்ள வாமொழியே. |
(இ - ள்.) பல விடங்களிலுந் தாவிச்செல்கின்ற விழியினையுடையாளே பெருமை பொருந்திய தணிகை மலையினை நினைப்பவர் நினையா நிற்கக் குற்றம் யாவையும் எழுந்தருளி நீக்கியருள் செய்கின்ற வீராட்டகாசத்தின் கண்ணுள்ள மலமற்ற இறைவன் அழகிய கையின்கண் தாவுதல் செய்து முழங்கு மானையொத்ததொரு மான் யான் தொட்ட கணையோடு ஈண்டு வந்ததா ? உள்ளவாறு மொழிவா யென்க. (வி - ம்.) காவித்தடவரை - தணிகைமலை. இப்பெயர் வருதற் காரணம் இந்நூல் இந்திரனருள் பெறுபடலம் பார்க்க. வீராட்டகாசம் - தணிகைமலையில் இறைவன் திருக்கோயில் கொண்டுள்ளவிடம். தழங்கல் - முழங்கல். மெய்ப்பாடு : இளிவரலைச்சார்ந்த பெருமிதம். பயன் : மதியுடம்படுத்தல். (196) |