| வேங்கை பொருந்திய) இடத்தினை நீ கூறின் இறைவற் கதனுரியுடை யாகுமென்க. (வி - ம்.) கருமான் - பன்றி. மருமம் - மார்பு. பேழ் - பிளந்த. கயம் - பெரிய. எய்துழி - சென்ற விடம். அது - அதன்றோல் : ஆகுபெயர். குரு - நிறம். மெய்ப்பாடு : இளிவரலைச்சார்ந்த பெருமிதம். பயன் : மதியுடம்படுத்தல். (198) சிங்கம் வினாதல் அஃதாவது வேங்கை வினாவ வாளா நின்றதனைக் கண்ட தலைவன் நீவிர் அவ்வேங்கை சென்றவிடங் கூறின் அதனுரியை இறைவனுடை யாக்குவேன் அது கூறுகின்றிலீர். கூறீராயினும் அதனாலென் ! யான் இறைவனுக்கு மேலாடையாம் வண்ணம் ஒரு சிங்கத்தினை யெய்தேன். அது முழங்கிக்கொண்டிவணுற்றது. கண்டீராயிற் கூறுகவெனக் கூறாநிற்றல். | | சிங்கத் துரியுத்த ராசங்கத் தண்ணற்குச் சேமம்வைக்கும் | | | சிங்கத் துரியுத்த ராசங்க மாகவொர் சிங்கமெய்தேன் | | | சிங்கத் துருவிவ ரச்சிலைத் திச்சிலை சென்றதுண்டு | | | சிங்கத் துருவங்கொ ணுண்ணிடை கண்ணுறிற் செப்புகவே. |
(இ - ள்.) சிங்கத்தின் றோலை மேலாடையாகவுடைய தலைவனாகிய இறைவனுக்குப் பாதுகாவலில் வைத்தற்கு சிங்கத்தின் றோலானது மேலாடையாகும் பொருட்டு ஒரு சிங்கத்தினை எய்தனன். அது வருந்தலான் (யான்) தேடிவர (அது) முழக்கஞ் செய்து இம்மலையிடத்துச் சென்றதாயுள்ளது. சிங்கத்தின் வடிவினைக்கொண்ட நுண்ணிய இடையாளே கண்டாற் சொல்வாய் என்றானென்க. (வி - ம்.) உரி - தோல். உத்தராசங்கம் - மேலாடை. சேமம்வைக்கும் - பாதுகாவலில் வைக்கும். சிங்க - வருந்த. துருவிவர - தேடிவர. சிலைத்து - முழங்கி. இச்சிலை - இம்மலை. கண்ணுறில் - காணில். மெய்ப்பாடு : இளிவரலைச்சார்ந்த பெருமிதம். பயன் : மதியுடம்படுத்தல். (199) அருட்டிறத்திளமுலை தெருட்டாமை வினவல் அஃதாவது பல்வகை வினாக்களுக்கும் விடையிறுக்காது நின்ற நிலை யினையுணர்ந்து நுங்களருளினுக்குப் பொருந்தியதல்ல வெனக் கெடுதி கூறாது நின்றீர். நாளுக்கு நாள் உங்கள் இடை தேயும்வண்ணம் வளரும் தனங்களைத் தெளிவியாததற்குக் காரண மென்னையெனக் கூறாநிற்றல். | | அருளிற் கடுத்ததன் றென்றோ கெடுதி யறைந்திலைமேற் | | | றிருளிற் கடுத்த குழலா யிடுகிடை தேய்ந்தொழிய | | | மருளிற் கடுப்ப வனமுலை நாளும் வளர்வதனைத் | | | தெருளிற் கடுப்பத் தெருட்டா திருப்பதென் செப்புகவே. |
|