பக்கம் எண் :

களவுப் படலம்1011

 ஊர்தங்கிச் சென்னெறி மீண்டுறு நாமத்தி னுற்றுப்பன்மான்
 போர்தங்கு வேட்டை புரிந்ததெல் லாம்பொய் யிடைக்கிரங்கி
 வார்தங்கு கொங்கை தெருட்டி முறியு மலர்த்தொடையும்
 கார்தங்கு கூந்தலிற் சூட்டுதற் கோவிவர் காதனெஞ்சே.

(இ - ள்.) நெஞ்சமே, முன்னரூரின்கட் டங்கிப் பின்னர்ச் செவ்விய வழிக்கட்சென்று மீண்டு பொருந்துகின்ற பெயரின்கட் சேர்ந்து போர்த் தொழில் பொருந்துகின்ற மான் வேட்டஞ் செய்தன யாவும் இல்லையென்னு மிடையினையுடையாளுக்கு வருத்தமுற்றுக் கச்சுத்தங்கிய கொங்கையினைத் தெளிவித்துத் தளிரினையும் மலர்மாலையினையும் மேகத்தின் கருமைத்தன்மை தங்கும் குழலிற் சூட்டுதலின் பொருட்டோ இவர் காதலான் இங்ஙனம் வினாயதென்க.

(வி - ம்.) கொங்கை தெருட்டி என்பது - அருட்டிறத் திளமுலை தெருட்டாமை வினவலென்னுந் துறை. முறியும் மலர்த்தொடையும் என்பது - கண்ணிபூங்குழற் கொண்ணுமோ வென்றலென்னுந் துறை. மெய்ப்பாடு : மருட்கை. பயன் : உசாவி ஐயந் தீர்த்தல்.

(204)

பாங்கி தலைவியைப் பரிமளத்தயிர்த்தல்

அஃதாவது இறைவன் பெட்டவாயில் பெற்று இரவு வலியுற்று முன்னுறு புணர்ச்சியை யுரைப்பின் இன்னது நிகழுமென் றறியா தஞ்சிக்கரந்து மதியுடம்படுப்பத் தோழிமதியுடம்படுங்கால் அவள் ஆராயும் ஆராய்ச்சி யெல்லாம் நாட்டமாம். அஃது எட்டாம். அவற்றுள் முன்னுறு புணர்ச்சியை உணர்தற்குக் காரணம் எழுவகைய. அவை நாற்றம் முதலிய ஏழாம். "நாற்றமுந் தோற்றமும் ஒழுக்கமு முண்டியும்" கள. 23ஆம் சூத்திரத்தா னறிக. இனிப் பரிமளத்தயிர்த்தலாவது ஓதியும் நுதலும் பேதைப் பருவத்தினுக்குத்தக நாணாது தலைவன் கூட்டத்தான் மான்மதச் சாந்தங்கள் முதலியனவும் பலபூக்களும் விரவி நாறுதல்.

 ஒழுகுங் கரிய குழலுங் கலம்பகத் தொள்ளொளியின்
 முழுகுந் திலக நுதலு முழவுறழ் தோளும்விரைப்
 புழுகுங் கலவு முலையும் புலவோர் துணியுளமும்
 மழுகும் புதுமணம் வீசுவ நந்தம் வளர்கொடிக்கே.

(இ - ள்.) நமது வளர்கின்ற கொடி போல்பவளாகிய தலைவிக்கு நீண்ட கரிய கூந்தலும் நெற்றிச்சூட்டினுள்ள ஒளியான் மூழ்கப்பெற்ற திலகத்தினையுடைய நெற்றியும் மத்தளத்தினை யொத்த தோள்களும் நறு மணமுள்ள புழுகும், கலந்திருக்கப் பெற்ற தனங்களும் (அறிஞர்கள் நுண்பொருளினை யாராய்ந்து) துணிதற்குக் காரணமாகிய நெஞ்சமும் பழகுவதற்குக் காரணமான புதிய நறுமணம் வீசாநிற்கு மென்க.

(வி - ம்.) ஒழுகல் - நீளுதல். இதனை "வார்தல்போதலொழுகல் மூன்றும் நேர்தலும் நெடுமையும் செய்யும் பொருள்" என்னும் தொல். சொல். உரி. சூத்திரத்தா னறிக. திலகம் மேலாகக் கொள்ளப்படும் பொட்டு. மழுகுதல் - மழுங்குதல். மெய்ப்பாடு : நகை. பயன் : கரவு நாடல்.

(205)