| அலர்முலைப் பாங்கி அன்புகண் டுவத்தல் அஃதாவது தலைவன் குறிப்பினையும் தலைவி குறிப்பினையும் அறிந்த பாங்கி அவ்விருவர்மாட்டு நிகழும் அன்பின் செயல்கண்டு மகிழ்தல். | | மருளுங் கடந்து மருண்மாயை கன்ம வகைகடந்தெப் | | | பொருளுங் கடந்தவிர் வீராட்ட காசப் பொருளொடுயிர் | | | அருளுங் கடந்து கலந்ததொப் பாமென் னளவுகடந் | | | திருளுங் கடந்த குழலியொ டான விவர்கலப்பே. |
(இ - ள்.) என் (காவலாகிய) அளவினைக் கடந்து இருளினையுந் தன்னிறத்தால் வென்ற கூந்தலினையுடைய இவளோடுளவாகிய இத்தலைவர் கூட்டமானது மயக்கத்துக்குக் காரணமாகிய ஆணவமலத்தினையும் நீங்கி மருட்சியைத் தருகின்ற மாயாமலத்தையும் கன்மமலத்தினையும் அதன் பகுப்பாகிய மாயேயம், திரோதாயி ஆகிய மலங்களையும் இயல்பினீங்கி (எல்லாப் பொருளினையுங் கடந்து) யாண்டும் வியாபகமாக விளங்குகின்ற வீராட்ட காசமென்னும் தலத்தில் எழுந்தருளி இருக்கின்ற பரம்பொருளோடு ஆன்மா (சிவத்தினோடு ஆன்மாவை அத்துவிதமாகச் சேர்க்கும்) சிவசத்தியினையும் நீங்கி அப்பரம்பொருளோடு கலந்ததனை யொக்குமென்றா ளென்க. (வி - ம்.) ஆணவமலத்தின் காரியம் மருளாகலான் காரியத்தைக் காரணமாக உபசரித்து "மருளுங்கடந்து" என்றார். மாயேயமும், திரோதானசத்தியும் மலமாகலின் அவைகள் மலங்களோடு சேர்த்து எண்ணப்படுதலின் "மருண் மாயைகன்ம வகைகடந்" தென்றார். திரோதானசத்தியே அருட்சத்தியாகி ஆன்மா அத்துவிதமாகக் கலந்தபின் பிரிதலின் உயிர் அருளுங் கடந்ததொப்பா மென்றார். அளவு - ஈண்டுக் காவலின் அளவு. கலத்தல் - முன்னது அத்துவிதம் பின்னது கூட்டம். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : உவத்தல். (216) பெய்வளைப் பாங்கி பிறைதொழு கென்றல் அஃதாவது இருவரன்பினையும் கண்டுவந்த தோழி செவ்வானின்கட் டோன்றிய முந்நாண் மதிக்கலையைக் காட்டித் தானுந்தொழுதுநின்று நீயுமிதனைத் தொழுவாயாகவென தலைமகள் புணர்ச்சி நினைவறியா நிற்றல். | | முந்நாண் மதிக்கலை செவ்வா னெழுந்தது மூசளிசேர் | | | மைந்நாண் மலர்க்குழன் மண்டலந் தாங்கிய வாளரவின் | | | பைந்நாண் மணியல்குற் பைந்தொடிப் பேரமைத் தோண்மடவாய் | | | கைந்நாண் மலர்க்கம லங்கண்டு கூம்பல் கடனமக்கே. |
(இ - ள்.) மொய்க்கின்ற வண்டுகள் சேரப்பெற்ற நிறத்தான் மேகமும் நாணமடைகின்ற மலர்கள் பொருந்திய கூந்தலினையும் பூமியைத் தாங்கிய ஒளிபொருந்திய ஆதிசேடனாகிய பாம்பின் படமும் நாணத்தக்க அழகிய அல்குலினையும் பசிய தொடியினையும் பெரிய மூங்கில்போன்ற தோளினையுமுடைய இளமைப் பருவமுடைய பெண்ணே, மூன்றாம்நாட் டோன்றுகின்ற மதிக்கலை செவ்விய வானின் |