| கட்டோன்றியது. அன்றலர்ந்த கைகளாகிய மலர்க்கமலங்கள் அதனைக் கண்ணுற்றுக் குவிதல் நமக்கு முறையா மென்றா ளென்க. (வி - ம்.) முந்நாண் மதிக்கலை - மூன்றாம்பிறை. மூசு - மொய்க்கின்ற. மை - மேகம். மண்டலம் - பூவுலகம். அமை - மூங்கில். கூம்பல் - குவிதல் : ஈண்டு வணங்கல். கடன் - முறை. மெய்ப்பாடு : நகை. பயன் : கரவுநாடி யுணர்தல். (217) கோற்றொடிப்பாங்கி வேற்றுமை வினாதல் அஃதாவது பிறைதொழுக வென்றபாங்கி அவள் தொழாமை கருதி அவள் மெய்க்கட் பட்டுவிளங்கும் வேறுபாடு கண்ணுற்று வினாவா நிற்றல். | | வாரித் தடுவில் லுழவர்கள் சூழும் வரையமுதே | | | பூரித் தனமுலை தெய்வங் கமழ்ந்தது பூங்குழலும் | | | பாரித் தனபணைத் தோள்சே யரிபரந் தன்றுவிழி | | | சீரித் ததங்க முழுது மிவைதாந் திகழ்வதென்னே. |
(இ - ள்.) நேரினின்று (பகைவர் மார்பாகிய நிலத்தினை) வில்லாகிய ஏரான் வருத்தமுறும் வண்ணம் உழுதலைச் செய்கின்ற வில்லேர் உழவர்கள் சூழாநின்ற மலையின்கண்ணுள்ள அமிழ்தம்போன்றவளே. தனங்கள் பருத்தன. பூவையணிந்த கூந்தல் தெய்வமணம் நாறிற்று மூங்கிலினையொத்த தோள்கள் பருத்தன. கண் செவ்வரி பரந்தது. உன் உடன்முழுதும் சிறப்புற்றன. இவைகள் (இங்ஙனம்) விளக்கமுறுதற்குக் காரணமென்னை யென்றா ளென்க. (வி - ம்.) பரந்தன்று - பரந்தது. சீரித்த - சிறப்புற்றன. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : கரவுநாடல். (218) சுனையாடல்கூறித் தோழி நகுதல் அஃதாவது வேறுபாடுகண்டு வினாய தோழி தலைவி நாணங்கண்டு சுனையாடினால் அச்சுனை கண்களினைக் கவரத்தக்க அழகினைத் தருமாயின் வேற்படையை யொத்த கண்ணினையுடையாய் யானும் சுனையாடிக் காண்பேனெனத் தலைமகளோடு நகையாடா நிற்றல். | | முலைத்தலைக் குங்குமந் தோயக் குழலின் முருகுவிம்மக் | | | கலைத்தலை தூசு கதுவக் கடைவிழி மைகரைய | | | மலைத்தலை வான்சுனை கண்கவர் காமர் வழங்குவதேல் | | | கொலைத்தலை வேலன்ன கண்ணாய்மற் றியானுங் குடைகுவனே. |
(இ - ள்.) கொலைத்தொழிலைத் தன்னிடத்தேயுடைய வேற்படை போன்ற கண்ணினையுடையவளே! தனங்களிடத்துக் குங்குமந்தோயவும், கூந்தலின் நறுமணமதிகரிக்கவும், கலைதல் செய்தலை உடைபொருந்தவும், விழிகளிற்றீட்டிய மைகரையவும் இம்மலையினிடத்துள்ள பெரியசுனை (கண்டார்) கண்ணைக் கவரத்தக்க விருப்பினைக் கொடுப்பதாயின் (நீயன்றி) யானும் அச்சுனையின்கண் மூழ்குவனென்றா ளென்க. |