| இருவருந்தணவா வியல்பிருதிறத்து மருவியபாங்கி மதியுடம்படுத்தல் அஃதாவது நடுங்கநாடிய தோழி இவ்விருவர் தன்மையினை இருவர் மாட்டும் ஒற்றித்துணர்ந்த தோழி வேற்படையையுடைய இவனுக்கும் இத்தலைவிக்கும் உயிரொன்றாயும் உடலிரண்டாயுமுளவெனக் கூறா நிற்றல். | | பன்னீ ருயிரும் பதினெண் ணுடலும் பயின்றியக்கும் | | | அந்நீ ரெனவடல் வேலோன் றனக்கு மமிழ்துயிர்க்கு | | | முந்நீர்த் தரள முறுவன் முரிபுரு வத்திவட்கும் | | | நன்னீ ருயிரொன்று மெய்யிரண் டாகி நயந்ததுவே. |
(இ - ள்.) பன்னிரு உயிர்களும் பதினெண் மெய்யினிடத்தும் பொருந்தி நடத்துகின்ற அத்தன்மைபோலக் கோறற் றொழிலையுடைய வேற்படையுடையானுக்கும் அமிழ்தினை வெளியிடுகின்ற கடலின்கட் டோன்றிய முத்துக்கள் போன்ற பல்வரிசைகளையுடைய வளைந்த புருவத்தினையுடைய இத்தலைவிக்கும் நல்ல நீர்மையினையுடைய உயிரொன்றேயாம். உடலிரண்டாகி விரும்பிய தென்க. (வி - ம்.) அமிழ்துயிர்க்கும் முறுவலெனக் கூட்டுக. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : மதியுடம் படுத்தல். இனிப் பாங்கியிற்கூட்டம். (223) ஏவின செய்வலென்றேந்த லிரத்தல் அஃதாவது பாங்கி மதியுடம்பட்ட பின்னர் தலைவன் இருவரையும் நோக்கிச் செஞ்செவியினையுடையீரே. ஏவல் கொள்விராமென வினவா நிற்றல். | | கழைவளர் முத்தமும் வேங்கையம் போதுங்கைக் கொண்டுதொடுத் | | | திழைவளர் கொங்கைக் கிடுகோ தினைப்புனத் தீண்டுகிளி | | | மழைவளர் சாரற் பெயர்க்கோநும் மாட்டுவா ளாங்கமைகோ | | | குழைவளர் செஞ்செவி யீரென்னை யேவலிற் கொள்ளுமினே. |
(இ - ள்.) காதணிகள் வளருகின்ற செவ்விய செவியினை யுடைய வர்களே. மூங்கிலினிடத்துத் தோன்றுகின்ற முத்தினையும் அழகிய வேங்கைமரத்தின் பேரரும்புகளையும் (கலந்து) கையாற்றொடுத்து அணிகலன்கள் தங்கப்பெற்ற நுங்கள் தனங்களில் அணிவேனோ, தினைப் புனத்தின்கண் (கதிரைக்கவ்வ) நெருங்கிய கிளிகளை மேகந்தங்கப் பெற்ற மலைப்பக்கத்து ஓட்டுவேனோ? நுங்கள்பக்கத்து வாளா அமைந்து தங்குவேனோ, என்னைத் தங்கள் குற்றேவலின்கட் கொள்வீராம் என்க. (வி - ம்.) இடுகு - இடுவேன். தன்மையொருமை வினைமுற்று ஓ, வினா. வாளா - சும்மா. குழை - காதணி. மெய்ப்பாடு : இளிவரல். பயன் : குறையுறுதல். (224) |