| (வி - ம்.) திருமாலுக்கு அம்மையார் புதல்வியாதலின் அவன் குலத்தைக் கற்பு முதலிய நற்குணங்களாற் புகழுறச்செய்து விளக்கலிற் குலக்கொழுந்தெனச் சிந்திக்குமென்றா னென்க. கற்பானும் நற்குண நற்செயலானும் புக்க இல்லத்தின்புகழ் உலகறியச் செய்தலின் "குலத்தினைப்பேணுமப் பெற்றிகொள்ளவரு மாதென்றா ரென்க. மெய்ப்பாடு - மருட்கை. பயன் : தோழிதெளியச் செப்பல். (226) எங்குலமிழுக்குமென் றிகுளையகற்றல் அஃதாவது தொழத்தக்க குலமுடையாளெனத் தலைவன் கூறாநிற்கப் பாங்கி தலைவியைக் குன்றினைச் சிறையறுத்த வேந்தன் முதலிய விண்ணவர் நன்றாகக் கருதினும் எங்குன்றவர் குலத்திற் கிழுக்கமுண்டாம் அலர்ச்சொல் கொழுந்தோடிப் படருமென்றா ளென்க. | | குன்றிய லுத்தொடர் வல்லின முன்பின் குறுகநிற்பிற் | | | குன்றுவ துள்ள வளவையி னின்னொடு கோற்றொடியைக் | | | குன்றிற கீர்த்தவ னாதியர் நன்கு குறிக்கினுமெங் | | | குன்றவர் வண்குலங் குன்றுவ புன்சொற் கொழுந்தெழுமே. |
(இ - ள்.) (செக்குக்கணை சுக்குக்கொடு என்னும்) குற்றியலுகரத் தொடர் மொழிகள் வல்லெழுத்துக்கள் மொழிகளினிறுதி யயலினும் வருமொழி முதலினும் பொருந்த நிற்குமாயினும் இலக்கண நூலிற் கூறியுள்ளனவாகிய அரைமாத்திரையிற் குறுகிக் கான்மாத்திரை யாவன (இறப்ப வுயர்ந்த) உன்னோடு (இழிந்த) திரண்டவளையை யணிந்த இவளைக் குன்றினைச் சிறையறுத்த வேந்தன் விண்ணாடர் உயர்வாகக் கருதினும் எங்கள் மலைவாழ்நர் வளப்பம்பொருந்திய குலங்கள் குறைபடுவனவாம். அஃதன்றியும் பழிச்சொற் கொழுந்துவிட்டு எழா நிற்குமென்றா ளென்க. (வி - ம்.) ஈற்றய லெழுத்தும் வருமொழி முதலெழுத்தும் வல்லினமா யிருத்தலால் ஓசைமிக்கொலித்தல் இயல்பு. அவ்வியல்பின்றித் தனக்கியல்பானமைந்த அரைமாத்திரையினுங் குறுகுமென்பார். குன்றியலுத் தொடர் உள்ள வளவையிற் குன்றுவதென்றார். திருமான் முதலிய விண்ணவர்கள் இம்மணத்தை மேலாகக் கருதினும் எங்குலத்திற் கேலாதென்பாள் குன்றவர் வண்குலங் குன்றுவ புன்சொற் கொழுந்தெழு மென்றார். மெய்ப்பாடு : அச்சம் சார்ந்த பெருமிதம். பயன் : தோழியகற்றல். (227) தலைவன் நுங்குலந் தழைக்குமென்றல் அஃதாவது எங்குலம் இழுக்குமென்றுரைத்த தோழிக்கு நுங்குலந் தழைக்குமென்று தலைவன் கூறாநிற்றல். | | பெயர்வினை சேரி னிடையுரி யாங்கும் பிறங்கெழில்வாய்ந் | | | தயர்வினை யெய்தா தினிதிய லாநிற்கு மாரணங்கே | | | மயர்வினை தீர்த்தருள் வீராட்ட காசத்தெம் மானருளால் | | | உயர்வினை யேநுங் குலமென்று மெம்மா லுறுவதுவே. |
|