| (இ - ள்.) அரிய தெய்வப் பெண்போல்வாளே பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் சேர்ந்தால் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் யாண்டும் வனப்பு வாய்க்கப்பெற்றுச் சோர்வடையாமல் இனிது நடவா நிற்கும். (அவைபோல) ஆன்மாக்களுக்குளவாகிய ஆணவத்தின் காரியமாகிய மயக்கத்தை நீக்கித் திருவருள்பாலிக்கின்ற வீராட்டகாசத்தின் கண்ணுள்ள எந்தலைவனருளான் நுங்குலமானது எம்மால் எஞ்ஞான்றும் உயர்ச்சியினையே பொருந்துவதாகு மென்றா னென்க. (வி - ம்.) மயர்வினை - (ஆணவத்தின் காரியமாகிய) மயக்கம். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : நுங்குல முயருமெனக் கூறல். (228) ஒண்டொடிப் பாங்கியுல குரைத்தொழித்தல் அஃதாவது உயரிய எம்மோடு நுமக்குக் கூட்டமுளவாயின் நுங்குலந் தழைக்குமெனக் கூறிய தலைவனுக்கு உலகிய லொழுக்கங் கூறி நீக்கல். | | கலைத்துறை போய வறிவிற்குங் காமர் குலங்களுக்கும் | | | சிலைத்துறை போய நலத்துக்குஞ் சீர்மை பயப்பநிற்கும் | | | நிலைத்துறை வையத் தியற்கையின் மாதினை நீபுணர்க | | | மலைத்துறை நாட்டும் படைத்தழும் பேய்ந்த மலர்க்கரனே. |
(இ - ள்.) பகைவரைக் கொன்று உறையினிடத்துப் படைக்கலங்களை நிலைபெறச் செய்தலான் அப்படைக்கலங்களின் தழும்பு பொருந்திய தாமரைமலர் போன்ற கையையுடையவனே. கல்வித் துறையிலே கைபோய (உனது அஃகியகன்ற கூர்த்த) அறிவின்றகுதிக்கும், கண்டார் விரும்பத்தக்க குலங்களுக்கும் விற்றொழிலின் றுறையிலே கைபோய நன்மையினுக்கும் மிகுந்த புகழை யுளவாக்க நிற்கின்ற (என்றும்) நிலைபேறுடைத்தாய்த் தங்குகின்ற உலகியற்கையின் வண்ணம் (நும்மறிவு குல முதலிய தகுதிக்கமைந்த) ஒருபெண்ணை நீ மணப்பாயாக வென்றா ளென்க. (வி - ம்.) காமர் குலங்கள் - (நும் தந்தைதாயர்) இவர் குலங்கள். சீர்மை பயப்பநிற்கு மென்னும் பெயரெச்சம் வையம் என்னும் இடப்பெயர் கொண்டு முடிந்தது. உறை - வாளிடும்பை. அதுதோன் முதலியவற்றாற் செய்யப்படுவது. மெய்ப்பாடு : மருட்கை. பயன் : உலகியல்கூறி நீக்கல். (229) அண்ணன்முறையல தெண்ணிலனென்றல் அஃதாவது உலகியல்கூறித் தோழியகற்றத் தலைவன் நான்கருதிய மணம் உலகவொழுக்கும் வேதவொழுக்கும் ஒத்த அன்பினையுடையார் செய்யப் பின்பற்றுவதும் உயர்ந்த இன்பந்தருவது மாகும். ஏனைய மணத்தினை விரும்பல் துன்பந்தர மேற்கோடலா மென்றா னென்க. | | வையத் தொழுக்கது மாமறைக் கண்ணதும் வாஞ்சைமிக்கோர் | | | உய்யத் தொடர்வது மோங்கின்ப மாவது முற்றிவண்யான் | | | செய்யத் தொடர்வது கண்டாய் திதலைமென் பூண்முலையாய் | | | நையத் தொடர்வன வேமற்றை மன்ற னயப்பனவே. |
|