| (வி - ம்.) சடம் - உடல். உயிரோடு உயிர்க்கு மயக்கமின்மையின் இவையிரண்டு மயங்கற்பொருட்டு இடையே இவ்விரண்டினையும் உடம்படுத்துதற்கு மெய்யொன்று வேண்டுவதாம். மெய்மேலுயிர் ஏறலியல்பாகலின் இடையுடம்படுத்தற்கு வேறொரு எழுத்துவேண்டல் மிகையாகலான் வேண்டப்படுவ தொன்றன்று. அதுபோல மெய்யெழுத்தினியல்பினை யொத்த தலைவியின்மாட்டு உயிரெழுத்தினையொத்த நீ கூடலியல்பாகலின் இடையிற் பிறிதொருவர் வேண்டுவது எதனுக்கு. ஆதலின் நின்குறையை நீயே கூறெனக் கூறினளென்க. மடம் - இளமை. மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் : செவ்விபெறுதல். (233) ஒழித்துறிற் பழிநிற் கொழியாதென்ன வழுத்தபு கிழவன் வருந்தியுரைத்தல் அஃதாவது தலைவனைத் தோழி நீயே நின்குறை கூறெனச் சொல்லக் கேட்டு ஒருவர்மாட் டொருவர் குறையிரப்பின் அக்குறை நீயே முடித்துக் கொள்ளென்பாரிலை. அவ்வாறன்றி இவளிந் நாளெல்லாம் என் குறை முடித்துத் தருவமென வீணேயுழற்றி இன்று நின்குறை நீயே முடித்துக்கொள்ளெனக் கூறாநின்றாளெனத் தலைமகன், அரையன்காவாது விடின் உலகென்னாம். வள்ளல்கரப்பானாயின் உலகெங்ஙனுய்யும். தலைவியைத் தரும் பான்மையளாகிய நீ இவ்வாறு கூறின் யான் கெடுவேனாக. நீ யிப்பழியைப் போக்குநெறி யீன்றெனக் கவன்றுரைத்தல். | | புரப்பான் விடுப்பி னுலகமென் னாம்புரை தீர்ந்தவள்ளல் | | | கரப்பா னெனிலிரப் பானெங்ங னுய்யுங் கனிமொழியைத் | | | தரப்பான் மையையல்லை யாயிற் றபுகமற் றியான்பழிநீ | | | துரப்பான் புகுநெறி யில்லைகண் டாய்சுடர்ப் பூண்முலையே. |
(இ - ள்.) அணிகலன்களை யணிந்த தனங்களையுடையவளே! உலகினைக் காத்தற்றொழில் செய்யும் அவ்வரையன் காவாதொழியின் அவ்வுலகம் யாதாய்முடியும். குற்றம் நீங்கிய வள்ளற் றன்மையையுடையான் (தன்னாலியல்வதை) ஒளிப்பானாயின் இரத்தல் செய்பவன் எங்ஙனம் பிழைப்பான். கனியின்சாறன்ன மொழியினை யுடையாளைத் தருந்தன்மையுடைய நீ அங்ஙனந் தருந்தன்மை யல்லையாயின் யான் கெடுவேனாக. நீ அப்பழியை நீக்கும்பொருட்டுச் செல்லும் வழியில்லை யென்றாளென்க. (வி - ம்.) தபுக - கெடுக. மற்று : அசை. கண்டாய் : அசை. மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் : செவ்விபெறுதல். (234) பிறைநுதற் றோழி பின்வருகென்றல் அஃதாவது என்னை நீக்கின் பழிநினக் கொழியும் வழியில்லெனக் கூறிய தலைவனைநோக்கி இக்கண்ணியையாம் இன்று ஏற்றுக் கோடலரிதாம். உண்மையாகப் பிற்றைநாள் வரிற்கண்ணியை யேற்ற லெளிதா மெனக் கூறாநிற்றல். |