| | கற்றைப் புரிசடை வீராட்ட காசக் கடவுளருட் | | | பற்றைப் புரிகலர் போற்கொடி யாரெமர் பார்த்திபனே | | | யிற்றைப் பொழுதரி தாங்கண்ணி யேற்ப தெமக்குமெய்யே | | | மற்றைப் பொழுது வரினெளி தாகும் வரையகத்தே. |
(இ - ள்.) அரசனே. கூட்டமாகிய கட்டமைந்த சடையினையுடைய வீராட்டகாசத்தின்கண்ணுள்ள எல்லாப்பொருளையுங் கடந்து நின்ற இறைவன் அருளாகிய பற்றினை விழையாதார்போலக் கொடுமையினை யுடையார் எம்மையன்மார். நுங்கையின் கண்ணியை யாங்கள் வாங்குவது எங்களுக்கிற்றை நாளருமையாகும். இம்மலையினிடத்து மறுபொழுதுவரின் (கண்ணியை ஏற்றல்) எளிதாகு மென்றாளென்க. (வி - ம்.) பற்று - பற்றுக்கோடு. இற்றைப்பொழுது - இன்று பொழுது. வரையகத்து ஏழாவதிறுதிக்கட் டொக்கது. மெய்ப்பாடு : அச்சஞ்சார்ந்த பெருமிதம். பயன் : செவ்விபெறுதல். (235) கையுறையேலெனக் காளையிரத்தல் அஃதாவது நுங்கண்ணியை இன்று ஏலேம் நாளை யேற்பேமெனக் கூறினா ளன்றி மறுத்தாளல்லளெனப் பின்னருந் தலைமகனிரவா நிற்றல். | | மாவைத் தணித்துய ரத்தியைச் சாய்த்துவண் வேங்கைகுழைத் | | | தேவைத் தவரொடு மாய்த்தென தங்கை யிருந்தநறும் | | | பூவைத் தளிரைநுங் கையகத் தாக்கிப் புலம்புமெனைக் | | | காவைத் தமர்த்த படைவிழி வேய்த்தோட் கனங்குழையே. |
(இ - ள்.) கூர்த்துப் போரினைச் செய்கின்ற வேற்படை போன்ற விழியினையும் மூங்கிலினையொத்த தோளினையும், கனவிய குழையினையு மணிந்தவளே. மான் கூட்டங்களைத் தணியச்செய்து, உயர்ந்த யானையைச் சாய்த்தல்செய்து வளவிய வேங்கையைக் குழையச்செய்து பாணங்களை வில்லினோடு மறைத்தல்செய்து எனதங்கையினிருந்த நல்ல பூவினையும் தளிரினையும் நுங்கள் கையிடத்தாக்கித் தனிமையுற்ற வென்னைக் காப்பாயாக வென்றா னென்க. (வி - ம்.) மா, அத்தி, வேங்கை இவை மூன்றும் மரத்தினையு முணர்த்திற் சிலேடை. ஏ - பாணம். தவா - வில். மாய்த்து - மறைத்து. புலம்பு - தனிமை. கா - ஆய்விகுதி புணர்ந்துகெட்ட முன்னிலை வினைமுற்று. மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் : செவ்விபெறல். (236) காதலற் கிகுளை பேதைமையூட்டல் அஃதாவது கையுறை ஏலென்று தலைவன் குறையிரந்து வேண்டத் தலைவி இறைவனும் விரும்பத்தக்க மிருகத்தையெய்தீர். அவை யிங்குப் பொருந்தின் நாங்க ளின்னலுறுவதல்லது பிழைத்தலு முண்டோவெனக் கூறாநிற்றல். |