பக்கம் எண் :

களவுப் படலம்1033

(வி - ம்.) பலா - பலாமரம். ஒருதாய் பொரித்த மயிற்குஞ்சுகளுள் தோகை தோன்றப்பெற்ற குஞ்சே மூத்தகுஞ்செனக் கருதல் முறை. இதனை, "மயில்முதற் குலத்துரிமையை மனுமுதல் மரபைச் செயிருற" எனக் கம்பரும் கூறியதனான் அறிக. சுலாவல் - சுற்றல். வம்பு - புதுமை. இதனை "வம்பமாரியைக் காரெனமதித்தே" என்னும் குறுந்தொகைச் செய்யுளா னறிக. முதுக்குறைவு - புத்தியறிதல். பேரறிவு என்பர். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : முன்னுறு புணர்ச்சி யறிதல்.

(244)

ஆற்றிய தோழிக் கவனயந்துரைத்தல்

அஃதாவது முன்னுறு புணர்ச்சிமுறையுற வுணர்த்தித் தன்னை யாற்றுவித்த தோழிக்கவன் விரும்பியுரையா நிற்றல்.

 கானொத்த கூந்தற் கனியொத்த செவ்வாய்க் கருநெடுங்கண்
 வானொத்த நுண்ணிடை மாதர்நல் லாய்மயர் கூர்ந்தவுளம்
 தேனொத் தமிழ்தொத்த மென்றீங் கிளவிசெப் பாவிடினே
 ஊனொத்த வாழ்க்கையு றாமே துவர வுலக்குவதே.

(இ - ள்.) கானையொத்த கூந்தலினையும் கொவ்வைக் கனியினை யொத்த சிவந்த வாயினையும் மைதீட்டிய நெடிய கண்ணினையும் ஆகாயத்தை யொத்த நுண்ணிய இடையினையுமுடைய யாவரும் விரும்பத்தக்க நல்லவளே! தலைவிகூட்டம் பெறாமையான் மயக்கமிகுந்த உள்ளம் இனிமையால் தேனினையும் அமிழ்தினையொத்த மெல்லிய இனிய மொழிகளை (யான்துணிவுறுமாறு) செப்பாதிருப்பின் உடம்போடு கூடி (உயிர்) வாழ்தலைப் பொருந்தாதாம். (இவ்வாழ்க்கை) முற்றக் கெடுப்பதாகு மென்க.

(வி - ம்.) கூர்தல் - மிகுதல். ஊன் - உடல். இதனை "ஊனானாய் உயிரானாய் என்னும் மணிவாசகர் திருவாக்கா னுணர்க. துவர - முற்ற. இதனை "துவரமுடித்த துகளறுமுச்சி" என்னும் முருகாற்றுப்படையா னுணர்க. உலக்குதல் - கெடுதல்.

(245)

அன்னையைப் பாங்கி யஞ்சியச்சுறுத்தல்

அஃதாவது முன்னுறு புணர்ச்சிகூறி வருத்தந் தணிவித்த தோழிக்கு யான் றலைவிகூட்டம் பெறுதற்கேதுவாகிய இனிய மொழிகளை நீ கூறாவிடின் இனி உடம்போடுகூடிய வாழ்க்கை பெறாமெனக் கூறிய தலைவனை நோக்கி அன்னையர்க் கச்சமுறுகின்றேன் எனக் கூறாநிற்றல்.

 முந்தினை யாங்ஙனஞ் சென்றனை பைங்கிளி மூரிமயில்
 செந்தினை யார்த்தியென் றென்னுயிர் மாதையுஞ் சீறுமன்னை
 வந்தினை யாநிற்ப வென்னையுஞ் சீறும் வளம்புனத்துக்
 கந்தினை யாத்தன்ன தோளா யினிச்சென்று காப்புக்கொண்டே.

(இ - ள்.) கட்டுத்தறியை யொத்த தோளினை யுடையவனே அன்னை இனிப்போய்க் காவல்கொண்டு வளம்பொருந்திய தினைப்புனத்தின்கண் பசிய கிளியினங்களையும் வலியமைந்த மயிலினங்களையும்