| செவ்விய தினையை யுண்ணச்செய்து முற்பட்டவளாய் எங்குச் சென்றாயென்று என்னுயிரனைய தலைவியையும் சீற்றம் கொள்வாள். அவள் வருதல்செய்து யான் வருந்தாநிற்ப என்னிடத்துஞ் சீற்றங்கொள்வாள் (ஆதலான் அஞ்சுகின்றே னென்றா ளென்க.) (வி - ம்.) முந்தினை - முற்பட்டவளாய். மூரி - வலிமை. ஆர்த்தி - உண்பித்து. இனைதல் - வருந்தல். யாத்தல் - கட்டல். காப்பு - காவல். தொழிற்பெயர். மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் : அச்சுறுத்தல். (246) அன்னவ டமரை அஞ்சியச்சுறுத்தல் அஃதாவது அன்னையை யஞ்சியச்சுறுத்த தோழி அவனீங்காமை கண்டு எமதையன்மார் வில்லினையும் அம்பினையுமுடையராய்ப் புனங்காக்க இனித் தோன்றுவரென்று தமர்க்கஞ்சி யச்சுறுத்தல். | | வில்லின ரம்பினர் வீங்கிய சீற்ற விளைவினர்வன் | | | சொல்லின ரென்னையர் தீம்புனங் காவலிற் றோற்றுவராற் | | | புல்லினர் போக்கருந் தன்மையி னாய்பொலந் தேர்க்கதிரோன் | | | கல்லினன் மேற்றிசை மெல்லிய லென்னிற் கலங்குவளே. |
(இ - ள்.) (உன்னைத்) தழுவினர் விடுதற்கரிய தன்மையினை யுடையாய் பொன்மயமான தேரையுடைய வெண்கதிர்க்கடவுள் மேற்றிசையின்கண்ணுள்ள வெற்பினை அடைந்தனன். எமதையன்மார் வில்லினையும் கணையினையுமுடையராய் மிக்க கோப விளைவினையுடையராய் வலிய சொல்லையுமுடையராய்க் காத்தற்றொழின்மேற் றோன்றுவர் (ஆதலாலவர் வரவுநோக்கி) மென்மைத் தன்மையையுடைய தலைவி என்னைக் காட்டிலும் கலங்குவ ளென்றாளென்க. (வி - ம்.) வில்லினர், விளைவினர், சொல்லினர் முற்றெச்சங்கள் புல்லுதல் - தழுவல். போக்கரும் விடுத்தற்கரிய. பொலன் - பொன். கல் - மலை. மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் : தமரையஞ்சி யச்சுறுத்தல். (247) குறியெதிர் பெறாதுகொற்ற வேலவன் முறுகியதுயரின் மூட்சி மீட்டுரைத்தல் அஃதாவது தமரையஞ்சி யச்சுறுத்தாளன்றி மறுத்தாளல்ல ளென்று கருதிக் குறியிடம் பெறாமைக்குத் தலைவன் முயற்சி செய்துரைத்தல். | | இட்டிடை வெஃகி யதுபோற் றுளும்பி யிறுக்குமுலை | | | மொட்டினை வெஃகி யதுபோற் பிணியுண்டு மொய்யரிக்கண் | | | பெட்டிக வின்றி யதுபோற் கறங்குதி பேதைநெஞ்சே | | | மட்டினை வெஃகி வரைநோக் கியமுட மானநின்றே. |
|