| (இ - ள்.) அறியாமையுடைய மனமே தேனைவிழைந்து மலையை நோக்கி நிற்கின்ற முடவனையொத்து நிலைபெற்ற (தலைவியின்) நுணுகிய இடையினை விழைந்து அவ்விடைபோலத் துளும்பல்செய்து (வாரால்) இறுக்கப்பட்ட தனமாகிய அரும்பினைவிழைந்து அவ்வரும்பு போலப் பிணித்தலுற்று நெருங்கிய அரிபரந்த கண்ணை விரும்பி அக்கண்ணினைப்போலச் சுழலுகின்றாய். (வி - ம்.) இட்டிடை - சுருங்கிய இடை. வெஃகல் - விரும்பல். மொட்டு - அரும்பு. பெட்டு - விரும்பி. இகத்தல் - நீங்கல். கறங்கு - சுழலல். மட்டு - தேன். முடம் - முடவன். மான - ஒப்ப. (248) சொல்லவட் சார்த்தித் துன்னிடம் பெற்றுத் தாங்குயிர் வேலோன் பாங்கியை யிரத்தல் அஃதாவது குறிபெறாது முயன்றுரைத்த தலைவன் நுந்தலைவிநென்னல் என்னுயிர் போகாவண்ணம் குறியிடங் கூறினாளெனக் கூறா நிற்றல். | | கன்னற் பொருசிலைக் காமனும் வாளி கடவியென்மே | | | லின்னற் பொருந விளைத்தும்விட் டானெய்த் திளிமொழியாய் | | | நென்னற் பொழிற்குறி நல்கின ளென்னுயிர் நிற்கும்வகை | | | மின்னற் பொறிநுண் சுணங்கே ரிளமுலை மென்கொடியே. |
(இ - ள்.) மின்னலைப்போலத் தோன்றுகின்ற நுண்ணிய சுணங்கோடுகூடிய முற்றாத் தனங்களையுடைய மெல்லிய அழகுடன் கூடிய கொடிபோல்வாளே. போர் செய்தற்குரிய கரும்பாகிய வில்லினை யுடைய மன்மதன் கணைகளைச் செலுத்தி என்னிடத்துத் துன்பம் பொருந்துதலைச் செய்தனன். இதனையறிந்து இளியென்னும் பண்ணினை யொத்த சொல்லினையுடையாய் என்னுயிர் நிலைநிற்கும்வண்ணம் நேற்றுப் பொழிலினிடத்துக் குறியிடம் நல்கின ளென்றானென்க. (வி - ம்.) இன்னல் - துன்பம். பொருந - பொருந்த. எய்த்து - அறிந்து. இளி - ஒருவகைப்பண். மின்னற்பொறி - மின்னலைப்போலத் தோன்றல். மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் : சொல்லவட் சார்த்தி இரத்தல். (249) பாங்கியோ டொற்றுமைப்படவிறை கிளத்தல் அஃதாவது தலைவியிடத்துச் சொல்லைச் சார்த்தி இரந்த தலைமகன் அவளோடு தனக்குளவாகிய கூட்டத்தினுக்குப் பாங்கியு முடன்படக் கூறாநிற்றல். | | பைந்தாட் குவளை யடைச்சிப் புணரிய பைம்பொழில்வாய் | | | கந்தார மென்மொழி கைகலந் தாடுகங் கண்ணுறுகோ | | | சிந்தா குலத்தி னிரந்தேற்குத் தான்செய் குறிநிலையைத் | | | தந்தாங் ககன்றவள் பின்சென்ற நெஞ்சந் தணப்பரிதே. |
|