பக்கம் எண் :

1036தணிகைப் புராணம்

(இ - ள்.) கந்தாரமென்னும் பண்ணைப்போன்ற மெல்லிய மொழியினையுடையாளே. பசிய தாளினையுடைய குவளைமலர்களைச் செருகிக்கூடிய பசிய பொழிலின்கண் இருவருங் கலத்தலுற்று விளையாடல் செய்வேம். நீ பார்ப்பாயோ. மனதின்கண்ணுளவாகிய இன்னல் காரணமாகக் குறையிரந்த வெனக்குத் தான்செய்த குறியிடத்தைக் கொடுத்து நீங்கினவள் பின்னர்ச்சென்ற நெஞ்சினை நீங்குதலரிதென்றா னென்க.

(வி - ம்.) அடைச்சி - செருகி. புணரிய - கூடிய. கந்தாரம் - ஒருவகைப்பண். கைகலத்தல் - கூடல், கண்ணுறல் - சார்த்தல். சிந்தாகுலம் - துன்பம். குறிநிலை - குறியிடம். தணத்தல் - நீக்கல். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : மதியுடம்படுத்தல்.

(250)

உள்ளமுழுதும் வெள்ளிடை யுமிழ
வேட்டபாங்கிக்கு மீட்டுமீதுரைத்தல்

அஃதாவது முன்னுறுபுணர்ச்சியுள தென்பதை வெளிப்படுத்திப் பாங்கியை மதியுடம்படுத்தற்குக் கூறிய தலைவன் உள்ளத்தின்கண்ணுள்ள கருத்துமுற்றும் வெளிப்பட அறிய நினைத்த பாங்கிக்குத் தலைவன் நான்குறை இரக்கும் இராக்காலத்து என்னையடைந்த பொழுது என்றன்மையாயுளள் இருள்நீங்கும் வைகறைப்பொழுதின்கண் தன்னை யடுத்த தம்மவர் தன்மையை யொத்துள ளென்றல்.

 வம்மோ வினிய மிழற்றுஞ் செழுந்துவர் வாய்க்கிளியே
 தம்மோ வெனநின் றிரப்ப வடுத்துத் தயங்குகங்கு
 னம்மோ ரனையண் மலர்வேய்ந்து பொய்த னயந்துதமர்
 தம்மோ ரனைய ளிருள்புலர் வைகறை தாழ்குழலே.

(இ - ள்.) இனிய மொழிகளை வழங்குகின்ற செழித்த பவளம் போன்ற வாயினையுடையதாகிய கிளிபோன்றவளே வருக. விளங்கா நின்ற இராப்பொழுதின்கண் ணுன்னைத் தந்தருள்வாயாக வென்று நின்று இரத்தல்செய்ய என்னைக்கூடி என்றன்மையுடையாளாயுள்ளாள். தாழ்ந்த கூந்தலினையுடையாள். இருள் புலர்கின்ற வைகறைப்பொழுதின்கண் மலர்களையணிந்து விளையாட்டினை விரும்பித் தமரதுதன்மை யுடையாளாய் உள்ளாள் என்க.

(வி - ம்.) வம் - வருக. மோ : முன்னிலையசை. தம்மோ - தருக. மோ : அசை. பளிங்கானது தன்றன்மையிழந்து சார்ந்ததன் வண்ணமாதல்போல தலைவியுந் தன்றன்மையிழந்து என்னையடைந்த ஞான்று என்றன்மையாயுளள் இராக்காலத்து. இருள் புலர்கின்ற வைகறைப் பொழுதின்கண் என்னின் னீங்கித் தம்மவரை யடைந்த காலத்து அவள் தன்மையளா யுளனென்பார். "இரப்பவடுத்துத் தயங்கு கங்குல் நம்மோரனையள், மலர்வேய்ந்து பொய்தல் நயந்து தமர்தம்மோரனையன்" என்றார். இதனை "இரண்டறி களவினங் காத லோளே, முரண் கொடுப்பிற் செவ்வேன் மலையன், முள்ளூர்க் கான நாறவந்து, நள்ளென் கங்கு னம்மோ ரன்னள், கூந்தல்வேய்ந்த விரவுமல ருதிர்த்துச், சாந்துளர் கதுப்பி னெண்ணெய் நீவி, அமரா முகத்த ளாகித், தமரோ ரன்னள்