| வைகறை யானே," என்னுங் குறுந்தொகைச் செய்யுளானறிக. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : மதியுடம்படுத்தல். (251) நின்னுளம் விழைந்த மின்னிடை மடந்தையை யெய்யேன் யானென விகுளையியம்பல் அஃதாவது தலைமகன் மகிழ்வு கண்டதோழி இவன் வாட்டமுறா வண்ணம் தழைவாங்குவனென வுட்கொண்டு என்னுயிர்த் தோழிய ரளவிறந்தா ருளர் அவருள்நின் நினைவின்கட் சென்றவர் இவரென யானறியே னெனக் கூறாநிற்றல். | | பள்ளம் படர்ந்த பெரும்புனல் போலெறுழ்ப் பார்த்திபநின் | | | னுள்ளம் படர்ந்த வுருவத்த ளோரை யுழப்பினெங்கும் | | | வெள்ளம் படர்ந்தன மெல்லிய லாருள்ளும் யார்விரிவீக் | | | கள்ளம் படர்ந்த கணவரைச் சூழ்ந்துயர் காவகத்தே. |
(இ - ள்.) வன்மைமிக்க இறைவனே அலர்ந்தமலர்க்கணின்று ஒழுகாநின்ற கள்ளாகிய நீர்செல்லுகின்ற நெருங்கிய மலையினைச் சுற்றி நெருங்கிய பொழிலின்கண் விளையாட்டு விழைவானுளவாகிய உழப்பினால் யாண்டும் வெள்ளம் சென்றாற்போன்ற மென்மைத் தன்மையை யுடைய மடவார் குழுவினுள் வைத்துப் பள்ளத்தின்கட் செல்கின்ற நீர்ப் பெருக்கினைப்போல நினது திருவுள்ளத்தின்கட் சென்ற திருவுருவத்தையுடையாள் யாவளென யான் அறியேனெனக் கூறினாளென்க. (வி - ம்.) உழப்பு - முயற்சி. இதனை, "உழப்பின்வாரா உறுதிகளுளவோ" என்னும் பட்டினத்தடிகள் திருவாக்கானறிக. பெரும்புனல் - வெள்ளம். எறுழ் - வலிமை. ஓரை - விளையாட்டு. வீ - பூ. கள் அம்பு - தேனாகியநீர். படர்ந்த - சென்ற. கணவரை - நெருங்கியமலை. மெய்ப்பாடு : மருட்கையைச் சார்ந்த பெருமிதம். பயன் : என்குறை இன்னாள் கண்ணதென வறியின் இவள் முடிக்குமென ஆற்றுதல். (252) தலைவி வண்ணந்தலைவ னியம்பல் அஃதாவது யான் ஓரையுழப்பினையுடைய மகளிர் பல்லாருள் வைத்து என்குறை இன்னாள் கண்ணதெனத் தெரிப்பின் தோழி முடிப்பளெனக் கருதித் தலைவியின் இயலினைத் தலைவன் கூறாநிற்றல். | | ஒளிதங் கியமதி தங்குஞ் சகோரமொண் வள்ளையின்வாய்க் | | | களிதங் கியசுற வேறுக டூங்குங் கதிர்க்குவட்டி | | | னளிதங் கரும்பொற் கணிமலர் பூக்கு மகன்கடல்வாய்த் | | | தெளிதங் கியபன் மணியிமை யாநிற்குந் தேமொழிக்கே. |
(இ - ள்.) தேனினைப்போன்ற இனிய சொல்லினையுடைய தலைவிக்கு ஒளிதங்கப் பெற்றுள்ள மதியாகிய முகத்தினிடத்துக் கண்களாகிய (நிலவருந்து) சகோரப் பறவைகள் தங்காநிற்கும். வள்ளைக் கொடியாகிய காதுகளின் மகரகுண்டலமாகிய சுறவேறுகள் தங்கா |