| நிற்கும். பிரகாசம் பொருந்திய முலையாகிய மலையினிடத்து வண்டுகள் தங்குதற்கரிய பொன்மயமான வேங்கைமலராகிய தேமல் மலராநிற்கும். பரந்த அல்குலாகிய கடலினிடத்துத் தெளிவுபொருந்திய பல அரதனங்கள் ஒளிவிடாநிற்கு மென்க. (வி - ம்.) மெய்ப்பாடு : உவகையைச் சார்ந்த பெருமிதம். பயன் : ஐயமறுத்தல். (253) கொவ்வைவாய்ப் பாங்கி செவ்வியில ளென்றல் அஃதாவது தலைவன் தலைவியினியலைத் தெரிக்க அதனையுணர்ந்த தோழி இறைவனே, எம்மாது கலப்பின்றி ஊசல்பந்து கூந்தல் முதலியன இவள் கலத்தலின்றி அழகுபெறாவெனக் கூறாநிற்றல். | | செவிமரு ளூசலுந் தேங்களிச் சந்தத் திணிமுலைநேர் | | | சவிமணிப் பந்துங் கவுணிகர் தண்ணீர் நிலையுமகில் | | | அவிமலி கூந்தல் பொருமலர்க் காவு மழகுபெறா | | | கவிமணி மோலிக் குரிசிலெம் மாது கலப்பின்றியே. |
(இ - ள்.) அணிதற்குரிய மணிகள் பதித்த முடியினையுடைய அரையனே எந்தலைவி கூட்டுறவின்றி (அவள்) காதினையொத்த ஊசலும் நறுநாற்றத்தினையுடைய களிப்புடன்கூடிய சந்தனஞ்செறிந்த தனத்தினையொத்த மணிகள் பதித்த பந்தும், கன்னத்தினையொத்துத் தெளிவாகிய நீர்நிறைந்த சுனையும் அகிற்புகை நிறைந்த குழலினையொக்கும் மலர்களையுடைய இளமரக்காவும் அழகினைப் பெறாவாயின வென்க. (வி - ம்.) மருள் : உவம உருபு. தேம் - வாசனை. சவி - ஒளி. கவுள் - கன்னம். நீர்நிலை - சுனை. ஆவி - புகை. கலத்தல் - கூடுதல். மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் : செவ்விபெறல். (254) செம்ம லிதுவே செவ்வியா மென்றல் அஃதாவது பாங்கி செவ்வியிலளெனக் கூறக்கேட்ட தலைவன் ஊசன் முதலியவற்றிற் கலப்பின்றி வாளாவிருக்குங் காலம் என்குறை முடித்தற்குரிய செவ்வியெனக் கூறாநிற்றல். | | திருந்தவந் தாளுங் குமாரலிங் கேசனைச் சிந்தைவைத்துப் | | | பெருந்தவந் தாவி னுழப்போர் கடுப்பப் பிணைந்தவுள்ளம் | | | வருந்தவந் தாமரை மாதுநின் றாலது வேமம்மர்நோய் | | | பொருந்தவந் தீர்த்தென்னை யோம்புறும் வாயில் புனமயிலே. |
(இ - ள்.) காட்டின்கண்ணுளதாகிய மயில்போன்றவளே. (ஆன்மாக்கள்) சமதம முதலிய குணங்களடைந்து திருத்த முறாநிற்க (தனது கைம்மாறில்லாக் கருணையால்தானே) வருதல் செய்தருளுகின்ற குமாரலிங்கேசப்பெருமானைச் சிந்தையின்கண் வைத்துப் பெரிய தவத்தினை வருத்தத்தோடு செய்கின்றவர்களை யொப்ப (என்பால்) விரும்பிய |