| | பின்னிலை வேட்டல் பெரிதினி தேபின்னர் மாறிநின்று | | | தன்னிலை தேய்ந்து தணியா ருயிரைத் தழீஇக்கொடொன்றா | | | முன்னிலை யீச னருள்போற் றழுவி முனிதுயர்கூ | | | ரென்னிலை நோக்கி யிரங்கவல் லார்ப்பெறி னேழைநெஞ்சே. |
(இ - ள்.) (சகலாவத்தையில்) அறியாமையோடுகூடிய மனமே, இறைவன் பிற்பட நானே முதலென முனைத்து நிற்கின்ற ஆன்மா சுத்தாவத்தையில் இறைவன் முற்படப் பின்னர்த் தான்பிற்பட்டு மாறுதலான் நிலைபெற்றுப் பசுத்துவந்தோயப்பெற்றுச் சாந்தமுற்ற ஆன்மாவைத் தழீஇக்கொடு அத்துவிதமாகக் கலந்தொன்றாகும் வண்ணம் முன்னிலையினின் றுணர்த்தும் இறைவனருள்போலத் தழுவுதல்செய்து முனியத்தக்க துயர்மிகுந்த என்நிலைமையினைக் கருதி இரக்கஞ்செய்ய வல்லவரை யான் துணையாகப்பெற்றால் பிற்றைநிலை விரும்பி இரத்தல் பெரிதும் இனிதா மென்றானென்க. (வி - ம்.) பின்னிலை வேட்டல் - பின்னர்நின்று குறைவேண்டல் பின்னர் மாறுதல் - இறைவனை வியாப்பியமாக்கித் தானே முதலெனச் சகலத்தில் நின்ற உயிர் சுத்தத்தில் இறை வியாபகமாக முற்படத்தான் பசுத்துவங்கெட்டு அவன் வியாபகத்துளடங்கிப் பின்னர் நிற்றல். முன்னிலையில் நிற்கும் இறைவன் அருட்சத்தி ஆன்மாவினை யவனோடு கலக்கச் செய்தலின் "ஆருயிரைத் தழீஇக்கொடொன்றா முன்னிலை யீசனருள் போற்றழுவி" யென்றார். மெய்ப்பாடு : இளிவரல். பயன் : செவ்விபெறாமை. (259) புரவலன் மடலே பொருளென மதித்தல் அஃதாவது நாணவும் நடுங்கவும் நாடியபின் தலைமகள் தன்குறை சொல்லமாட்டாது நிற்பத் தோழி இவளிறந்துபடவுங் கூடுமெனவுட்கொண்டு தலைமகனுடன் சொல்லாடாநிற்பப் பின்னருந் தலைவன் குறைவேண்டி நிற்பத் தோழி பின்னரு மறுத்துரைப்ப இக்குறை நின்னால் முடியுமென நின்னைவந் திரந்தேன் நின்னான்முடியாமையின் என்குறையை யான் மடலூர்ந்தாயினும் முடித்துக் கொள்வேனென நெஞ்சொடு கூறாநிற்றல். | | பஞ்சாய் முருந்தின் முறுவற் பவளச்செவ் வாய்க்கிரங்கி | | | நெஞ்சா யலைகிளை யில்லார் நெடியர் நிழல்சிறியார் | | | துஞ்சா வனந்த றொகுப்பா ரெனினுந் துலங்குநம | | | தெஞ்சா விடும்பை யெளிதொழிப் பாரிங் கிருந்தனரே. |
(இ - ள்.) நெஞ்சமே கிளைகள் (சுற்றம்) இல்லாதவரும் நீட்சி பொருந்திய (பெரியர்)வர் நிழல் (குளிர்ச்சி) சிறிதுடையவர் கெடாத மயக்கத்தைக் கூட்டுவாராய் அவர் தன்மையிருப்பினும் விளக்கமுறுகின்ற நமது குறையாத துன்பினை இனிதாக நீக்குபவர் இங்கேயுள்ளாராதலான் பஞ்சாயென்னும் கோரையி னடிப்பாகத்தினையொத்த பல் வரியையுடைய பவளம்போன்ற செம்மை நிறமுற்ற வாயினையுடையவளாகிய தலைவி காரணமாக வருந்தி ஆராயாதே கொள்ளென்றா னென்க. |