பக்கம் எண் :

1042தணிகைப் புராணம்

(வி - ம்.) பஞ்சாய் - கோரை. முருந்து - அடிப்பாகம். கிளை - சுற்றம். கொம்பு நெடியார் - நீண்டவர், உயரமாயுள்ளவர், நீட்சியுடையது. நிழல்சிறியார் - குளிர்ச்சியிலர், சிறிய நிழலையுடையர். அனந்தல் - மயக்கம். கள் மக்களுக்கும் பனைமரத்திற்கும் ஏற்றவாறு கொள்க. மெய்ப்பாடு : அழுகை. பயன் : ஆற்றாமை யுரைத்தல்.

(260)

மடலேற்றுலகின் வைத்தவனுரைத்தல்

அஃதாவது மடலே பொருளென மதித்த தலைவன் ஆற்றாமைகூறி அதுவழியாக நின்றுதலைவி காரணமாக வருந்த நந் தீயவூழால் விலக்கிய பெண்களை யுலகத்தவர் பெறுவார்களாயின் அவர்கட்கு ஒன்பதாவதுயிராகிய ஐகார மேறிய பெண் வலியல்லாமல் வேறொரு வலியுமின்றென்றல்.

 என்பா லருளுங் குமாரலிங் கேசனை யேத்தலர்போல்
 அன்பா லிணங்கு மணங்கனை யார்பொருட் டாவிநைய
 வன்பால் விலக்கிய பெண்பெறின் வையத் தவர்க்குமன்னும்
 ஒன்பா னுயிருற்ற பெண்ணன்றி வேறோ ருரனில்லையே.

(இ - ள்.) என்னிடத்தருளுதலையுடைய குமாரலிங்கப்பெருமானைத் துதியாத பாவிகள் வருந்துமாறுபோலத் தனதன்பாற் பொருந்தும் தெய்வப் பெண்ணையொத்த தலைவிபொருட்டு உயிர்வருந்த வலிய தீயவூழான் விலக்குதலைப் பொருந்திய தோழியாகிய பெண்ணை உலகத்தவர் துணையாகப் பெறுவாராயின் நிலைபெற்றிருக்கின்ற ஒன்பதாவதுயிராகிய ஐகாரம் ஏறிய பெண் (பெண்ணை) துணையாவதன்றி மற்றொரு உரனில்லை யென்றானென்க.

(வி - ம்.) வன்பால் - வலியபால்வரை தெய்வம். என்பானுயிருற்ற பெண் - பெண்ணை; பனை. உரன் - வலி. மெய்ப்பாடு : இளிவரல். பயன் : ஆற்றாமை யுணர்த்தல்.

(261)

ஒண்மடல்யானே யூர்வலென்றல்

அஃதாவது முன்னர் உலகின்மேல் வைத்துணர்த்தி அதுவழியாக நின்று யான் வருந்த மாறுபாடுற்ற உள்ளத்தை யுடையவளே இறைவன் விழைகின்ற நீறென் பெருக்கு முதலியவற்றை யணிந்து கிழி கைக்கொண்டு மடன்மாவை நுங்கை குணங்களைப்பாடிச் செலுத்துவே னென்றல்.

 கவளத்த வேழக் கவர்மணிப் போர்வைக் கடவுள்விழை
 தவளத்த நீறென் பெருக்குந் தரித்துத் தகுமடன்மா
 பவளத்த வாய்நுங்கை பண்பினைப் பாடிப் படங்கைதழீஇத்
 துவளத் தடாய வுளத்தாய்நும் மூர்வயிற் றூண்டுதுமே.

(இ - ள்.) கவளத்தையுடைய யானையின் (கண்டார் கண்ணைக்) கவரத்தக்க போர்வையினை யணிந்த இறைவன் விரும்புகின்ற வெண்ணிறமமைந்த நீறும் எலும்பும் எருக்கம்பூவும் தரித்துத் தகுதியாகிய