| பனைமடலாகிய குதிரையைப் பவளத்தின் றன்மையையுடைய வாயினை யுடைய நுந்தங்கையாகிய தலைவியின் குணங்களைப் பாடுதல்செய்து (அவளுருவம் வரைந்த) கிழியினைக் கையிற்றழுவி (யான்) வருந்தக் கோட்டமுற்ற உள்ளத்தையுடையவளே நும்மூரின்கண்ணே செலுத்துவேம் என்றா னென்க. (வி - ம்.) கவளம் - யானையுணவு. போர்வை - மேற்போர்வை. தவளம் - வெண்மை. படம் - கிழி. துவள - வாட. தடாய - கோட்டமுற்ற. தூண்டல் - செலுத்தல். மெய்ப்பாடு : இளிவரல். பயன் : ஆற்றாமை யுணர்த்தல். (262) அறனின்மை கூறியாங்கவண் மறுத்தல் அஃதாவது தலைமகன் வெளிப்படநின்று மடலேறுவே னென்று கூறக்கேட்ட தோழி இனியிவன் மடலேறவுங் கூடுமென வுட்கொண்டு நாணினை விட்டுவந்து நீர்மடலேறுதல் செயின் அறன் யார்கண்ணதாகு மெனக் கூறாநிற்றல். | | கலைமுற்றும் வையத் திழவா தளிக்குங் கடனடுத்த | | | இலைமுற்றும் வார்மட லேந்தக லல்கு லிடைநெருக்கும் | | | முலைமுற்றும் பொன்விளை மாதினை வீழ்ந்து முரித்தணியிற் | | | சிலைமுற்றுந் திண்புய யார்கண்ண தாகுந் திருந்தறனே. |
(இ - ள்.) விற்றொழில் முற்றுப்பெற்ற திண்ணிய புயத்தையுடைய ஐயனே. கலைத்தொழில் யாவும் இவ்வுலகின்கண்ணுள்ளவர்கள் இழந்து போகாவண்ணம் கொடுக்கின்ற முறைமையினைப் பொருந்திய விலைப்பொருள் நிறைந்த நீண்டமடலினை அகன்ற அல்குலினையுடைய (பாரத்தான்) இடையை வருத்துகின்ற (அணிகலன்களை) ஏந்திய தனங்கள் முழுதும் தேமல் தோன்றிய தலைவியினை விரும்பி முரித்தல் செய்து அணிவாயாயின் அறன் யாரிடத்தாகுமோ வறியேனென்றா ளென்க. (வி - ம்.) நூல்கள் முழுதும் இறவாமலிருத்தற்குத் தன்பாலுள்ள மடலினைத் தரும் முறையினை பனையுடைமையின் "கலைமுற்றும் வையத் திழவாதளிக்குங் கடனடுத்த இலைமுற்றும் வார்மடலென்றார். மெய்ப்பாடு : நகை. பயன் : மடல் விலக்குதல். (263) விலக்கிய பாங்கிக்குத் தலைவனெதிர் விளம்பல் அஃதாவது மடலேறுதல் தகாதென்று விலக்குதல் செய்த பாங்கிக்கு அருளின் இலக்கணத்தையும் அவ்வருளைப் பிறர்க்களிக்கு மிலக் கணத்தினையும் யான் முன்னரே யறிந்துவைத்துளேன். இத்தலைவியின் பொருட்டு இன்று மடலுடையேன். நாளை யெங்ஙனமாவேனோ யானறியே னென்றல். | | அருளு மருளு நலனுமெ லாம்பண் டறிவுடையேன் | | | இருளு மருளு மிணர்மலர்க் கூந்த லிலங்குதொடித் |
|