பக்கம் எண் :

1044தணிகைப் புராணம்

 தெருளு மருளும் வழங்குஞ் சிதரரிக் கண்பொருட்டு
 மருளு மருளு மடலுடை யேனின்று வாணுதலே.

(இ - ள்.) ஒளிபொருந்திய நுதலினையுடையாளே! அருளினையும், அவ்விருளைப் பிறர்க்குக் கொடுக்கு நலனுமாகிய எல்லாவற்றையும் பண்டே யறிந்துவைத்துளேன். ஒருவர் செவியறிவுறுக்க வேண்டா. இருள் மயங்குதற்கேதுவாகிய பூங்கொத்தினையுடைய குழலினையும் விளங்கு வளையினையும் நோய் நோக்கான் மயக்கமும் (அந்நோயைத் தீர்க்கும் மற்றையநோக்கான்) தெளிதலும் கொடுக்கின்ற சிதரிய அரிகள்பொருந்திய கண்ணையுடைய தலைவி காரணமாக. இன்று மயக்க மென்னும் பொருளும் தான் மயக்கமுறுதற் கேதுவாகிய மடன்மாவை யுடையேன் நாளை எங்ஙனம் ஆவேனோ யானறியே னென்றானென்க.

(வி - ம்.) சிதரரிக்கண் : ஆகுபெயர். மருள் - மயக்கம். குணத்தை வைசேடிகர் பொருளாகக் கோடலின் இவரும் "மருளும் மருளும் மடலுடையேன்" என்றார். இதனைச் சினத்தைப் பொருளென்று கொண்டவன்கேடு" என்னும் பகுதிக்குரையாசிரியர் கூறிய உரையானறிக. இன்று மடலுடையேன் நாளைவரை பாய்வேன் என்பது கருத்து. மெய்ப்பாடு : இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன் : மடலேறுவ னென்றல்.

(264)

எழுதரிதென்ன வேந்தலை விலக்கல்

அஃதாவது அறனின்மைகூறி விலக்கிய பாங்கிக்கு இன்று மடலுடையேன் நாளை யாதுசெய்வனோ தெற்றென வறியேனெனக் கூறக் கேட்ட பாங்கி மடலேற்றினுக்குரிய கிழியில் இத்தலைவியின் அவயவம் யாவும் நீ வரைந்து கைக் கொளினும் இன்பமிகுதியைத் தருகின்ற தொழிலொன்றையும் நீ எங்ஙனம் வரையவல்லுநை? வல்லுநையாயின் அம்முயற்சியில் விரையச் செல்வாயாகவெனக் கூறாநிற்றல்.

 பொழிலொன்று பூங்குழ னல்லா ளவயவம் பொற்பவெலாம்
 எழிலொன்ற நாடி வரைந்துகைக் கொள்ளினு மின்பமிக்காம்
 தொழிலொன்றுந் தீட்டவல் லாய்வல்லை யேற்றுனை யப்புகுக
 தழலொன்று வேற்கை தளிரொன்றி நின்ற தனிவள்ளலே.

(இ - ள்.) நெருப்பின்றன்மை பொருந்திய வேற்படை பொருந்திய கையின்கண் தளிர்பொருந்தி நின்ற ஒப்பற்ற வள்ளற்றன்மையை யுடையானே! இப்பொழிலின்கட் பொருந்திய பூவைமுடித்த கூந்தலினையுடைய நல்லாள் அவயவங்கள் அழகுபெற யாவையும் வனப்புப் பொருந்த ஆராய்தல் செய்துவரைந்து நீ கையின்கட் கொள்வாயாயினும் இன்பினை மிகுதியாகத் தருகின்ற (அவ்வவயவங்களின்) செயலொன்றினையும் நீ வரைய வல்லுநைகொல். (அங்ஙனந்தீட்ட) வல்லமை யுடையையாயின் (அச்செயலில்) விரையச் செல்வாயாக வென்றா னென்க.

(வி - ம்.) வல்லாய் - வன்மையிலாய் : எதிர்மறை. பின்னதுடன் பாடு. மெய்ப்பாடு : நகை. பயன் : மடல்விலக்குதல்.

(265)