| அழகுபொருந்தப் படைத்தல்செய்து கைக்கொண்டமை யாது வல்லமையிலர்போல் எங்களிடத்துப் பன்முறையும் வருதல்செய்து வருத்தமிகுந்து இரப்பது யாதுகாரணமோ யாங்களறியோ மென்றா ளென்க. (வி - ம்.) உரு - வடிவு. திருத்தக - அழகுபொருந்த. திறன் - வலிமை. மெய்ப்பாடு : நகை. பயன் : மடல்விலக்கல். (267) எள்ளற் பாங்கியை யிறைவனெதிரெள்ளல் அஃதாவது பொய்த்திறங் கூறினாயென எள்ளிய பாங்கியை இறைவன் எதிரே இகழ்ந்து கூறாநிற்றல். | | முட்டாட் கமல முதல்வனைப் போலெம்மை முன்னினைகொல் | | | கட்டா ரலங்கற் கருங்குழ லாய்கரு மால்சிரங்கை | | | வட்டா டியதிறல் வீராட்ட காசத்தெம் மான்வகுத்த | | | ஒட்டா ரவையின் மறையோ டுலக வொழுக்கயர்த்தே. |
(இ - ள்.) கட்டுதல் பொருந்திய மாலையையணிந்த கரியகூந்தலினையுடையாய்! கரியவிண்டுவின் தலையைக் கையின்கண் வைத்து வட்டுக்காயாடுதல்போல ஆடல்செய்த வீராட்டகாசமென்னுந் தலத்திலெழுந்தருளிய எமது தலைவன் திருவாய்மலர்ந்தருளிய விதியோடு உலகவொழுக்கத்தினையும் பகைவர் அவையின்கண் மறந்து கூறுதல்போல (நீயும் வேதவிதியினையும் உலகவொழுக்கினையும்) மறந்து முட்டாளையுடைய தாமரையின்கண்ணுள்ள தலைவனைப்போலெம்மையும் நினைத்தனை போலுமென்றா னென்க. (வி - ம்.) எம்மான் வகுத்தமறை யோடுலகவொழுக்கெனக் கூட்டுக. வட்டு - வட்டுக்காய். இதனை "கல்லாஅச்சிறார் நெல்லிவட்டாடும்" என்னும் நற்றிணைச் செய்யுளானறிக. அவையின் - 'இன்' உவமப் பொருளில் வந்தது. ஒட்டாரவையில் தம்மையும் தம் நிலையையும் மறந்து பேசல்போல நீயும் உன்னையும் உலகவொழுக்கினையும் மறந்து கூறினையென்பார். ஒட்டாரவையி னுலகோடொழுக்கயர்த்து, முட்டாட் கமலத்தய னென்றார். பிரமன் படைத்த பெண்ணைக் காதலிக்க அவள் அதுகண்டு நான்கு திக்கினுஞ் செல்ல செல்லுந்திசைக் கொருமுகமாகப் படைத்தான். அதுபோல நான் படைத்த அக்கன்னி எனக்குத்தனயை யாதலின் நான் விரும்பல் தகாதென்பான் "முட்டாட்கமலத்தயனென வென்னை முன்னினைகொல்" என்றார். முட்டாட்கமலத்தயன் என்பதற்கு முட்டாளாகிய தாமரைக்குத் தலைவன் எனவும், முள்ளைத் தண்டிலுடைய தாமரையின்கண்ணுள்ள பிரமனெனவும் பொருள்கொள்க. வேதவிதியையும் உயர்ந்தோ ரொழுக்கையும் கைக்கொள்ளாது பேதைமை யானிங்ஙனங் கூறினாயென எதிரெள்ளினா னென்க. மெய்ப்பாடு : நகை, பயன் : எதிரெள்ளல். (268) மடலினூக்கம் வரவரத் தணித்தோ ளடல் வேலண்ணலாற்ற வுரைத்தல் அஃதாவது தன்னை இகழ்ந்துகூறிய தோழியை எதிரே இகழ்ந்த தலைவனுக்கு மடலேறுதலின்கண்ணுள்ள உள்ளக் கிளர்ச்சியைத் தணித்த பாங்கி தலைவனாற்றும்வண்ணஞ் சொல்லா நிற்றல். |