| வழக்கென்றே கொள்வர் ஆசிரியர். "அறக்கழிவுடையன பொருட்பயம் படவரின் வழக்கென வழங்கலும் பழித்தன்று என்ப" எனும் பொருளியற் சூத்திரத்தானறிக. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : (தலைவன் நயந்தானென இவள் கொண்டாள் கொல்லோவெனத் தலைவி கருதுமானால் தோழிகூறவே) மறைபுலப்படுத்தல். (272) ஆங்கவன்வரவு பாங்கிகூறல் அஃதாவது அறிக்கழிவுடையன கூறிக் குறிப்பு வெளிப்படுத்தா நின்ற தோழி பிடியோடுகூடிய யானையை நோக்கித் தழையோடென்னைக் கடைக்கணித்துவருந் தொழிலன்றி பெயர்த்தடியிடாது பித்தினாழ்ந்தன னெனக் கூறாநிற்றல். | | பிடியொடு தோன்றிய குஞ்சர நோக்கிப் பிடித்துணங்கும் | | | கடியொடு தோன்றிய கண்ணியொ டென்னைக் கடைக்கணித்துக் | | | குடியொடு தோன்றிய கொள்கையி னாய்குழை கிற்பினல்லா | | | தடியொடு தோன்றுந் தொழில்புரி யார்பித்தி னாழ்ந்தனரே. |
(இ - ள்.) உயர்குடித் தோற்றத்தினோடு தோற்றிய கொள்கையை யுடையாய்! பிடியானையுடனே நீங்காது காணப்பெற்ற யானையினைப் பார்த்துத் தான் விட்டுவிடாதுபற்றி யிருத்தலான் வாடிய நறுமணத்துடன்கூடிய பூங்கண்ணியினுடன் என்னையுங் கடைக்கண்ணாற் பார்த்தல்செய்து வருந்துகிற்பி னல்லாமல் அடியிடுதலாற் றோன்றுந் தொழிலினைச் செய்யாராய் பித்தின் கண்ணமிழ்ந்தன ரென்றா ளென்க. (வி - ம்.) கடைக்கணித்தல் - கடைக்கண்ணாற் பார்த்தல். உயர் குடிப்பிறப்பினுக்கேற்ற உயர்நடையினை யுடையா ளென்பார். "குடி யொடுதோன்றிய கொன்கையினாய்" என்றார். அடியோடுந் தோன்றும் தொழில் நடத்தல். பித்து - (உன் கூட்டம்பெற வேண்டுமென்னும்) பைத்தியம். மெய்ப்பாடு : இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன் : மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தல். (273) மடன்மா வேறவலித்தன னென்றல் அஃதாவது அவன்றளர்ச்சியைக் கூறிய பாங்கி மடன்மாவின்கண் அவனேற எண்ணினனெனக் கூறாநிற்றல். | | விண்ணோங் கியபெண்ணை மாமட னோக்கும் விழையகிலா | | | மண்ணோங் கியவெருக் கின்முகிழ் நோக்கும் வரைகுவன்போல் | | | எண்ணோங் கியவென தின்னுரு நோக்கு மிதுவுமுண்டாற் | | | பண்ணோங் கியமொழி யாயறி யேனவன் பாவகமே. |
(இ - ள்.) பண்ணினைப்போல இனிமையாலுயர்ந்த மொழியினை யுடையவளே! வானையளாவிய பனையின் பெரிய மடலினையும் நோக்குவான். யாவரும் விரும்பாத மண்ணினிடத்துயர்ந்த வெருக்கஞ்செடியினரும்புகளையும் நோக்குவான். தீட்டுபவனைப்போல எண்ணத்தினுக்குயர்வாகிய எனதினிய வடிவினையும் நோக்குதலாகிய இத்தொழிலுமுளது; ஆகையான் அவன் பாவனையை யானறியே னென்க. |