பக்கம் எண் :

1050தணிகைப் புராணம்

(வி - ம்.) முகிழ் - அரும்பு. நோக்குமிது - நோக்குதலாகிய இத்தொழிலு மென்க. எண்ணோங்கிய - எல்லா எண்ணத்திலும் மிக்குத் தோன்றுகின்ற, உரு - வடிவம். பண்ணோங்கிய - பண்ணினுமுயர்ந்த. பாவகம் - பாவனை. மெய்ப்பாடு : இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன் : வலிதாகச் சொல்லி
குறைநயப்பித்தல்.

(274)

கவர்பொருட் பாங்கிக்குக் கவர்பொருள் வகையா

லென்னொத்தனையென இறைவிகூறல்

அஃதாவது மடன்மாவேறவலித்தன னென்று கவர்பொருள்படக்கூறிய பாங்கிக்குக் கவர்பொருள் வகையால் என்னை நீயுமொத்தனை யெனத் தலைவி கூறாநிற்றல்.

 உயங்கிய வண்புல வோர்க்கருள் செய்ய வொலிகடல்புக்
 கியங்கிய வல்லவு ணக்களை மாய்த்திருந் தோடுணையாத்
 தயங்கிய மாமறை யோம்பலிற் றாழ்குழ லாய்வரைவாழ்
 நயங்கிளர் நம்பிக்குங் கான்வளர் நம்பிக்கு நாட்டமொன்றே.

(இ - ள்.) தாழ்ந்த குழலினையுடைய தோழியே (அவுணர்களால் வருத்தமுற்ற வளப்பமிக்க தேவர்கணிமித்தம் அருளினைச் செய்ய ஒலிக்கின்ற கடலின்கட் புகுந்து இயங்குகின்ற சூரன் முதலிய அவுணர்களாகிய களையினைக் கட்டு இரண்டுதோளுந் துணையாகக்கொண்டு விளங்கிய பெரிய வேதத்திற்கூறிய வொழுக்கங்களாகிய பயிரைப் பாதுகாத்தலின் குன்றுதோறாடல் செய்து வாழ்கின்ற நன்மையால் விளங்குகின்ற பூரணகுணமுடையானாகிய தலைவனுக்குக் கருத்தொன்றே யாகுமென்க.

(வி - ம்.) (அவுணர்களால்) வருத்தமுற்ற வள்ளற்றன்மையினையுடைய தேவர்கணிமித்தம் ஒலியையுடைய அலையோடுகூடிய கடலின்கட் சென்று (வேதத்தினைக் கவர்தல்செய்து) இயங்குகின்ற வலிய அவுணர்களாகிய களையினைக்கட்டு இரண்டு தோள்களையும் துணையாகக் கொண்டு (எல்லாப்பொருளும்) விளங்குகின்ற பெரிய வேதமாகிய பைங்கூழைப் பாதுகாத்தலின் முல்லைநிலத்தில் வளர்தல் செய்கின்ற குணபூரணனாகிய விண்டுவுக்கும் கருத்தொன்றே யாகுமென்றா ளென்க. மெய்ப்பாடு : அச்சஞ்சார்ந்த பெருமிதம். பயன் : கவர்பொருள் வகையான் என்னொத்தனை யெனல்.

(275)

பாங்கிதன் மேற்படுத்திய பொருளை

யாங்கவடன்மே லாக்கினள் கிளத்தல்

அஃதாவது கவர்பொருள் வகையான் என்னையொப்பாய் எனக் கூறிய தலைவியை நோக்கிச் சிதாகாச வடிவினனாகிய இறைவன் தவத்தோர் செயலைத் தஞ்செயலாக்கிக் கோடல் இயல்பேயாம். அதுபோல என்செயலையும் நின்செயலாக்கிக் கோடலியல்பெனக் கூறல்.

 வானெனத் தோற்றிய வீராட்ட காசத்து வள்ளல்பெம்மான்
 யானெனத் தோற்றிய மாமல மாய்த்திட் டிருந்தவத்தோர்