| | தானெனத் தோற்றிய செய்தியெல் லாந்தனக் காக்கிவிடும் | | | கானெனத் தோற்றிய பூங்குழ லாய்கடல் சூழ்நிலத்தே. |
(இ - ள்.) கானெனக் கண்டார் கருதும்வண்ணம் தோன்றுதல் செய்கின்ற பூவையணிந்த கூந்தலினையுடையாளே! கடலாற் சூழப்பெற்ற நிலவுலகின்கண் (அன்பர்க்கு) சிதாகாசவடிவாய்த் தோன்றுதல் செய்கின்ற வீராட்டகாசத்தின்கண் ணெழுந்தருளி யிருக்கின்ற வள்ளற் றன்மையோடுகூடிய பெருமையையுடைய இறைவன் (காதலினால்) யானே முழுமுதலென முனைத்தெழுதற் கேதுவாகிய கரிய ஆணவ மலத்தினைக் கெடுத்துப் பெரிய தவத்தினையுடையார் (முத்தியிலாததும் யான் அடியான் சிவானுபவ மென்றற்கே யுரியவன்) தானேயென்று தோன்றுதல்செய்த அறிவிச்சை செயல்களையெல்லாம் தன்செயலாக்கிக் கொண்டு அவர்கட் கருள்செய்தல் இயல்பாம். அங்ஙனமே என்செயலி யாவையும் நின்செயலாகக் கோடலின் பெருந்தன்மைக்குத் தக்கதே யாமென்றா ளென்க. (வி - ம்.) வான் - சிதாகாயம். யான் - அகப்பற்று. மாமலம் - கரிய ஆணவமலம். தவத்தோர் தானென - தவத்தினை யுடையார் சிவானுபவத்தில் அடியான்றான் என்று கருதத் தனதாக்கிவிடுதல் - அத்தவத்தோர் செயலை இறைவனென்று கோடல். அஃதாவது அவர்கள் செயலைச் சிவமாகிய தன் செயலாகக் கோடல். ஆகையால் குற்றேவன் மகளாகிய என்செயலை நின்செயலாகக் கோடல் நின்னுயர்குடிப் பிறப்பிற்குத் தக்கதாமென்றல் குறிப்பெச்சம். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : தன்செயலை அவள் செயலாக்கல். (276) மடலரிதாயினும் வரைபாய் வுண்டென வடல்வே லண்ணலையஞ்சின ளெதிர்தல் அஃதாவது பாங்கி தன்மேற் சார்த்திக்கூறிய செயலினைத் தலைவி மேற் சார்த்திக்கூறிய பின்னர்த் தலைவி மடலேறுதல் தவிர்ந்தானேனும் வரைபாய்வன் போலுமென் றஞ்சிக் குறைநேர்தல். | | வெள்ளாங் குருகு மகன்றிலுந் தூங்கும் வியன்குடம்பை | | | உள்ளாங் கருவு முலப்பில தோங்கு பனையெனினும் | | | கள்ளாங் கொழுகும் வரைபாய் தலுமுண்டு காதனெஞ்சே | | | தள்ளாங் கடிதெதிர் வாந்தணப் பாநந் தளர்வினையே. |
(இ - ள்.) காதலினையுடைய நெஞ்சே! வெள்ளிய குருகினங்களும் மகன்றிற் பறவையினங்களுந் தங்கும் பெரிய கூட்டினுள்ளாற் பொருந்தும் முட்டைகளும் கெடுதலிலவாதற்குக் காரணமாக உயர்ந்த பனையெனக் கருதி மடலேறா ராயினும் கள்ளொழுகுகின்ற வரையின்கண்ணிருந்து (நான் உடம்படாது விடின்கீழே) பாய்தலு முளதாம் (ஆதலான் இக்குறையை) நீக்குகேமாகி விரைவினேற்றுக் கொள்வாம்; நந்தளர்வினை நீக்குவாமென்க. (வி - ம்.) வெள்ளாங்குருகு - கொக்கு. மகன்றில் - நீர்வாழ் பறவை. கரு - முட்டை. தணப்பாம் - நீக்குவாம். தளர்வு - தளர்ச்சி. மெய்ப்பாடு : அச்சம். பயன் : குறைநேர்தல். (277) |