| குறைநயப் பித்தபின் கொய்தளிரேந்திக் கறைபயில் வேலோன் கண்டனனிரத்தல் அஃதாவது தலைவி குறைநயப்பித்த பின்னர்த் தலைவன் தளிர் முதலிய கையுறைகளைத் தாங்கிக் கண்டனனிரத்தல். | | ஆலங் கனிந்த விழிக்கா விகளள்ளி யள்ளியுண்ட | | | சீலங் கனிந்தவென் னாருயி ரோடுஞ் செறிந்தவுளம் | | | கோலங் கனிந்த கரத்தா மரைத்தளிர் கொண்டளிப்பின் | | | ஏலங் கனிந்த குழலாய் பழியன் றியைபுடைத்தே. |
(இ - ள்.) மயிர்ச்சாந்த முதிர்ந்த கூந்தலினையுடையவளே! நஞ்சத்தின் றன்மை முதிர்ந்த விழிகளாகிய காவிமலர்கள் அள்ளியுண்ணப்பட்ட ஒழுக்க முதிர்ந்த எனதரிய வுயிரினோடு நும்மாட்டுப் பதிந்த மனம் அழகுமுதிர்ந்த கைகளாகிய தாமரைகளால் (யான் கையுறையாகத் தரும்) தளிரினை ஏற்றுக்கொண்டு கருணைசெய்யின் பழியினை யுடைத்தாகாது. (ஏற்றல்) நுமக் கியைபுடைத்தாமென்று கூறினா னென்க. (வி - ம்.) செறிந்தவுளம் - நும்மாட்டுப் பதிந்தவுளம். கனிதல் - நன்கு முதிர்தல். அளிகருணை - இடைபுடைத்து. (ஏற்றுக்கோடல் நுமக்கு) சம்பந்தமுடையதாகும். மெய்ப்பாடு : அழுகை. பயன் : ஆற்றாமையுணர்த்தல். (278) அரிதுமறைவிடுத்த பெருமையைத் தெரிப்பான் கையுறை வகையிற் பெய்வளை விலக்கல் அஃதாவது தலைவன் கையுறையோடு சென்று இரந்த பின்னர் மறைப்பொருளை வெளிப்படுத்தியமை யறிந்து பின்னருந் தோழி கையுறையை மறுத்தல். | | களம்பயில் கண்டத்த னேகம்ப நாதன் கருணைவளர் | | | வளம்பயின் மாந்தளி ராகவை வேலெங்கு லத்திறைவன் | | | உளம்பகை யென்ன வொருமா வெழுதலு முள்ளவெலாம் | | | இளம்பகை யென்றிகழ் வாரெங்கு லத்தோ ரெழின்மன்னனே. |
(இ - ள்.) அழகமையப்பெற்ற இறைவனே நஞ்சக்கறை தாங்கிய கண்டத்தினையுடைய திருவேகம்பத்தின்கண்ணுள்ள ஏகம்பநாதன் கருணையால் வளர்கின்ற எல்லா வளங்களும் நிறைந்த மாமரத்தின் (நீ கொணர்ந்தவை) தளிராக விருப்பினும் கூரியவேற்படையையுடைய எங்குலத்திற்குத் தலைவனாகிய முருகன் திருவுள்ளத்துக்குப் பகையாக (சூரனாகிய) ஒருமாதோன்ற எங்குலத் தலைவர்கள் (உலகின்கண்) ணுள்ளனவாகிய மாவினையெல்லாம் முற்றாத பகையாகுமென்று இகழ்வார்கள். ஆதலான் நீ கொணர்ந்த மாந்தழையை யாங்கள் ஏலேமெனக் கூறினா ளென்க. (வி - ம்.) இளம்பகை - முற்றாப்பகை. (279) |